Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகில் முதன்முதலாக ரோபோட் வரி விதிக்கவிருக்கும் நாடு இதுதான்!

மனிதர்கள் செய்யும் வேலைகளைப் பல்வேறு துறைகளில் இன்று ரோபோட் இயந்திரங்கள் செய்யத் தொடங்கிவிட்டன. தானியங்கி என்றழைக்கப்படும் ஆட்டோமேஷன் இல்லாத உற்பத்தித் தொழிற்சாலைகளே இல்லை என்று சொல்லக்கூடிய அளவில் ரோபோ இயந்திரங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது.

பில் கேட்ஸ்

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான பில் கேட்ஸ் சமீபத்தில், "மனிதனுக்கு மாற்றாகத்தானே ரோபோ வருது. அப்ப அதுக்கிட்டயும் வரி கட்ட சொல்லுங்க. 50,000 டாலருக்கு உழைக்கும் ஒரு மனிதன், தனது சம்பாத்தியத்தில் கணிசமான அளவு வருமான வரி கட்டுகிறான். அது தவிர சேவை வரிபோல ஏகப்பட்ட வரிகளைக் கட்ட வேண்டியிருக்கிறது. அப்படியென்றால் ஆட்டோமேஷன் தொடர்பான அனைத்துக்கும் இந்த வரிகள் வேண்டும்தானே?. ரோபோக்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களும் வரி செலுத்த வேண்டும்" எனத் தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

ரோபோட் மெஷின் - தானியங்கி இயந்திரம்

இந்நிலையில், ஆட்டோமேஷன் உபகரணங்களை அதிகமாகப் பயன்படுத்தும் நாடான தென் கொரியா உலகில் முதல்முதலாக 'ரோபோட் வரி' முறையைக் கொண்டுவரவிருக்கிறது. ஆட்டோமேஷன் உற்பத்தித் தொழிற்சாலைகளுக்குத் தற்போது 7 சதவிகிதம் அளவுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சலுகையில் 2 சதவிகிதம் அளவுக்குக் குறைக்கும் 'ரோபோட் வரி' குறித்த மசோதா அந்நாட்டில் விரைவில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. ரோபோட்களுக்கு நேரடியாக வரி விதிக்காவிட்டாலும், வரிச் சலுகையைக் குறைக்க தென் கொரியா எடுத்துள்ள முடிவு, பில் கேட்ஸ் சொன்னதை வரவேற்கும் விதமாக இருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement