Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கல்லணை வழக்கு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவு!

திருச்சி மாவட்டத்தில் இருக்கும் கல்லணை தொடர்பான வழக்கில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

கல்லணை

தற்போது இருக்கும் அணைகளில் மிக பழமையான  அணை என்று கருதப்படும் கல்லணை 2-ம் நூற்றாண்டில் கரிகால சோழனால் கட்டப்பட்டது. இந்த கல்லணை தமிழனின் அடையாளத்தை தாங்கி நிற்கிறது. இந்நிலையில் இதற்கு ஆபத்து உள்ளதாக திருச்சியைச்  சேர்ந்த ராஜசேகர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 'திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள திருவளர் சோலை, திருவானைக்கோவில், கொண்டையம் பேட்டை ஆகிய கிராமங்களில் உள்ள மணல் குவாரிகளில் தொடர்ந்து விதி மீறல்கள் நடைபெறுகிறது. குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிகமான பொக்லைன்களை வைத்து இரவு பகலாக மணல் அள்ளுகின்றனர். குவாரிகளுக்கு அருகே 2000-ம் ஆண்டுகள் பழமையான கல்லணை அமைந்து உள்ளது. குவாரிகளால் இந்த அணைக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் நீலத்தடி நீர் குறைந்து வருவதால் விவசாயம் மற்றும் மக்களின் குடிநீர் ஆதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, இந்த குவாரிகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மனுவில் கேட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோரைக் கொண்ட அமர்வு, 'திருச்சி மாவட்ட மணல் குவாரிகளுக்கு தொடர்புடைய பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விளக்கம் அளிக்க போதிய கால அவகாசம் அளித்திருந்தோம். அப்படி இருந்தும் ஏன் இவ்வளவு நாள்களாக பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை. இது குறித்து அவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 21-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement