Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இரண்டாவது குற்றவாளி திலீப்!? விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்...

மலையாள நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் கடந்த மாதம் 10-ம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது ஆலுவா சப்-ஜெயிலில் அவர் அடைக்கப்பட்டு ஒரு மாதம் ஆகிறது. மிக முக்கியமான வழக்குகளில் கைது செய்யப்படுவர்களை 90 நாள்கள் வரைதான் காவலில் அடைக்க சட்டத்தில் இடம் உண்டு. அதனால் திலீப்பையும் 90 நாள்கள் வரை காவலில் வைக்க அனைத்து நடவடிக்கைகளையும் கேரள போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். 90 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால் கைது செய்யப்பட்டவருக்கு ஜாமின் கிடைக்கும். அதனால் விரைவில் கேரள போலீஸார் திலீப் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தயாராகி வருகின்றனர். குற்றப்பத்திரிகையில் முதல் குற்றவாளியாக பல்சர் சுனிலும் இரண்டாவது குற்றவாளியாக நடிகர் திலீப்பையும் சேர்க்க கேரள போலீஸார் முடிவு செய்துள்ளனர் என்று தெரிகிறது. மேலும், திலீப்புக்கு எதிராகப் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் ஜாமீன் கேட்டு மூன்றாவது முறையாக ஐகோர்ட்டில் திலீப் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஏற்கெனவே திலீப்பின் ஜாமின் மனுவை அங்கமாலி மாஜிஸ்திரேட் நீதிமன்றமும் கேரள உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. தீலீப்பின் நீதிமன்ற காவலும் முடிவடைந்துவிட்டது. இதற்கிடையில் மீண்டும் ஜாமின் கேட்டு நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்து வருகிறார்.

திலீப்பின் சிறைவாசத்தை வேண்டுமென்று போலீஸார்  நீட்டித்து வருவதாக கொச்சியைச் சேர்ந்த சலீன் என்பவர் மனித உரிமை ஆணயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதை விசாரித்த கேரள மனித உரிமை ஆணைய உறுப்பினர் மோகன்குமார் இந்தப் புகார் குறித்து
3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய எர்ணாகுளம் எஸ்.பி-க்கு உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக மேலும், இரண்டு முக்கிய நபர்களை போலீஸார் கைது செய்ய வேண்டி இருப்பதால், அதன்பின் திலீப் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement