'வெல்வது நானில்லை... நாம்!' கமல் மீண்டும் ட்வீட்! | Actor Kamal Haasan tweets again

வெளியிடப்பட்ட நேரம்: 22:24 (10/08/2017)

கடைசி தொடர்பு:08:19 (11/08/2017)

'வெல்வது நானில்லை... நாம்!' கமல் மீண்டும் ட்வீட்!

தொடர்ச்சியாக அரசியல் சம்பந்தமாக தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வரும் நடிகர் கமல்ஹாசன், இன்று புதிதாக  ட்வீட்கள் தட்டியுள்ளார்.

கமல்ஹாசன்

அவர், 'விம்மாமல் பம்மாமல், ஆவன செய். புரட்சியின் வித்து தனிச் சிந்தனையே. ஓடி எனைப் பின் தள்ளாதே களைத்தெனைத் தாமதிக்காதே. கூடி நட, வெல்வது நானில்லை நாம்' என்று ட்விட் செய்தார்.

அடுத்த சில நிமிடங்களிலேயே, 'புரிந்தவர் புரியாதோர்க்குப் புகட்டுக. நாட்டிற்கு ஊழியம் செய்வோரை கேலி செய்யாதே. மூப்பெய்தி மாளும் முன். சுதந்திரம் பழகு. தேசியமும் தான்' என்று மீண்டும் ட்வீட் தட்டினார்

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற முரசொலி நாளிதழின் பவளவிழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அப்போது அவர், 'திராவிடம் என்பது தமிழ்நாட்டில் மட்டுமோ தென்னிந்தியாவில் மட்டுமோ இருப்பது இல்லை. சிந்து நாகரிகம் முதலே திராவிடம் உள்ளது. 'ஜனகனமன'வில் திராவிடம் உள்ள வரை திராவிடம் இருக்கும். திராவிடம் என்பது வாக்குகளின் எண்ணிக்கை இல்லை. திராவிடம் என்பது மக்கள் சக்தி. திராவிடத்தை யாராலேயும் அழிக்க முடியாது' என்று பேசியிருந்தார். இதையடுத்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.