Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருச்சியில் விசைத்தறி ஜவுளி கண்காட்சி தொடங்கியது

நாட்டின் ஜவுளி உற்பத்தியில் விசைத்தறித் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது  என திருச்சியில் துவங்கிய விசைத்தறி ஜவுளி கண்காட்சி விழாவில் மாவட்ட ஆட்சியர் பேச்சு.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தாஜ் திருமணம் மஹாலில் ஜவுளித்துறையின் சார்பில் விசைத்தறி ஜவுளி விற்போர், வாங்குவோர் சந்திப்பு கண்காட்சியை, ஜவுளி ஆணையத்தின் கோவை மண்டல உதவி இயக்குநர் குமரவேல், திருச்சி மாவட்ட சிறு மற்றும் குறு தொழிற் சங்கத் தலைவர் கே.கனகசபாபதி, ஜவுளி ஆணையத்தின் உதவி இயக்குநர் சிவஞானம், திருச்சி ஜவுளிகள் மற்றும் ஆயத்த ஆடைகள் சங்கத்தைச் சேர்ந்த ஏ.கே.உசைன் உள்ளிட்டோர் சகிதமாக கலந்துகொண்ட மாவட்ட கலெக்டர் இராசாமணி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய மாவட்ட கலெக்டர் இராசாமணி,

 

“இந்தியாவில் தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அதில் குறிப்பாக தொழில் துறையில் தமிழகம் மிக சிறப்பாகவும் முனைப்புடனும் செயல்பட்டு வருகிறது. கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், சென்னை என உற்பத்தியாகும் பொருள்கள் பிற மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இந்தியாவில் ஆடைகள் உற்பத்தி மிகச் சிறப்பாக செயல்படுகிறது. வரும் காலங்களில் எந்த தொழிலாக இருந்தாலும் அவை திருச்சி மாவட்டத்தில்தான் தொடங்க வேண்டும் என்பதற்கு முன்னோடியாக திருச்சி மாவட்டம் விளங்குகிறது. தொழில் வளர்ச்சி மாவட்டமாகவும், பன்முக தொழில் தொடங்கக் கூடிய மாவட்டமாக திருச்சி விளங்கும். திருச்சியில் எந்த தொழில் வேண்டுமானாலும் தொடங்கலாம். ஜவுளித் தொழில் தொடங்குவதற்கும் திருச்சி மாவட்டம் சிறந்து விளங்கும். தொழில் செய்ய ஆர்வமுள்ள பயனாளிகள் கண்டறிந்து அரசின் அனுமதிபெற்று அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும்" என்றார்.

''நமது நாட்டின் ஜவுளி உற்பத்தியில் விசைத்தறித் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. 2013-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 24 லட்சத்து 86 ஆயிரம் விசைத்தறிகள் அமைப்புசாரா பிரிவில் உள்ளன. இவற்றில் 1.03 லட்சம் நாடா இல்லா விசைத்தறிகள் ஆகும். இந்த விசைத்தறித்துறை, நாட்டின் மொத்த ஜவுளி உற்பத்தியில் 57 சதவிகிதத்துக்கும் அதிகமான பங்களிப்பினை அளிக்கிறது. மேலும் 44 லட்சத்து 86 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது. விசைத்தறியில் தயாரிக்கப்படும் 60 சதவிகித துணி மற்றும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன'' என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement