வெளியிடப்பட்ட நேரம்: 08:12 (11/08/2017)

கடைசி தொடர்பு:08:12 (11/08/2017)

நீட் தேர்வு உள்ஒதுக்கீடு விவகாரம் - அவசர வழக்காக உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

நீட் தேர்வுகுறித்த குழப்பங்கள் தொடர்ந்துகொண்டே இருகிறது. தமிழகத்தில் நீட் தேர்வினால் மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள், மிகக்குறைந்த அளவிலேயே தேர்வுபெற்றனர். மற்ற மாணவர்களின் மருத்துவக் கனவு நீட் தேர்வினால் கலையும் அபாயம் ஏற்பட்டது.

உச்சநீதிமன்றம்


இதனால் தமிழக அரசு, மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவிகித இடஒதுக்கீடும், சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு மீதம் இருக்கும் 15 சதவிகித இடங்களும் ஒதுக்கப்படும் என்ற உள்ஒதுக்கீடு அரசாணையை அறிவித்தது. இந்த அறிவிப்பை ரத்துசெய்ய வேண்டும் என்று சி.பி.எஸ்.இ மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்றம் தமிழக அரசின் அரசாணையை ரத்துசெய்தது. 
இந்நிலையில்,  நடப்பாண்டு நீட் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், "நீட் தேர்வை தடைசெய்ய முடியாது. வெவ்வேறு கேள்வித்தாள்களை  சி.பி.எஸ்.இ வழங்கியது ஏற்புடைய தில்லை. வரும் காலங்களில், இந்தத் தவறுகள் நடைபெறாமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள்குறித்து அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும்" என்று கூறியது. 
 இதே போன்று தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தின் அரசாணை ரத்து தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, இன்று அவசர வழக்காக எடுத்து விசாரணை நடைபெறும். நீட் தேர்வில், தமிழகத்தின் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களின் மருத்துவக் கனவுக்கு கடைசி வாய்பாக இது பார்க்கப்படுகிறது.