வெளியிடப்பட்ட நேரம்: 09:03 (11/08/2017)

கடைசி தொடர்பு:09:03 (11/08/2017)

'இரோம் சர்மிளாவுக்கு நாங்கள் ஆதரவு'- ஆதிவாசிகள் கூட்டமைப்பு

இரோம் சர்மிளாவுக்கு ஆதரவளிப்பதாக, பழநிமலைப் பகுதியில் வாழும் ஆதிவாசிகள் கூட்டமைப்பு அறிவிப்பு.

இரோம் சர்மிளா

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வசித்துவருகிறார், இரும்புப் பெண்மணி இரோம் சர்மிளா. இவர், தனது காதலன் தேஸ்மந் கொட்டின்கோவை திருமணம் செய்துகொள்வதற்காக, கடந்த ஜூலை 12-ம் தேதி கொடைக்கானல் சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்ப மனு அளித்தார். இவரது திருமணத்திற்கு பலர் எதிர்ப்புத் தெரிவித்து,  சார் பதிவாளர் அலுவகத்தில் மனு கொடுத்துள்ளனர். இந்நிலையில், பழநிமலைப் பகுதியில் வாழும் ஆதிவாசிகள், இரோம் சர்மிளாவின் திருமணத்திற்கு ஆதரவு தெரிவித்து, கொடைக்கானல் சார் பதிவாளர் அலுவகத்தில் மனு அளித்தனர்.

இரோம் சர்மிளா 

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பினர் , '' எங்களுக்காகப் போராடுவேன் என இரோம் சர்மிளா கூறியுள்ளார். இது, நாங்கள் செய்த பாக்கியம். கொடைக்கானல் மலைப் பகுதிகளில் எங்களின் பிரச்னைகளைத் தீர்க்க இரோம் சர்மிளாவுடன் இணைந்து நாங்கள் போராடுவோம். 16 ஆண்டுகள் மணிப்பூரில் போராடிய இரும்புப் பெண்மனி இரோம் சர்மிளா. இவரது திருமணத்திற்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு. இவர்களது திருமணத்தை, ஆதிவாசிகளான நாங்கள் முன்னின்று நடத்திவைப்போம்'' என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க