வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (11/08/2017)

கடைசி தொடர்பு:09:37 (11/08/2017)

தி.மு.க மாவட்டச் செயலாளர்களுக்கு அவசர அழைப்பு..!

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். 

அண்ணா அறிவாலயம்


முரசொலி பத்திரிகையின் 75-வது பவளவிழா இன்றும் கொண்டாடப்படுகிறது. இன்று நடைபெறும் பவளவிழா பொதுக்கூட்டத்தில், பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலர் கலந்துகொள்கின்றனர். இந்நிலையில், இந்தப் பொதுக்கூட்டத்துக்கு முன்பாக, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்து, அவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் செயல் தலைவர் ஸ்டாலின். இந்த ஆலோசனையில், அ.தி.மு.க - வில் தற்போது நிலவும் உட்கட்சி சூழ்நிலைகுறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில், தினகரனை  ஒதுக்கிவைப்பது என்று தீர்மானம் நேற்று  நிறைவேற்றபட்டது. இதற்கு எதிராக தினகரனும் நடவடிக்கைகளில் இறங்கயுள்ள நிலையில், தி.மு.க மாவட்டச் செயலாளர்களுக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மாவட்டச் செயலாளர்களுடனான இந்தக் கூட்டம், காலை 10 மணிக்கு நடைபெறும் எனத் தெரிகிறது.