ரஜினி முதல்வராக வேண்டி கூழ் ஊற்றிய ரசிகர்கள்!

 

ரஜினி

மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில், ரஜினி ரசிகர்கள் ஆடி கடைசி வெள்ளியான இன்று, 5ஆயிரம் பேருக்கு கூழ் ஊற்றி அம்மனை வழிபட்டனர்.

அதைத் தொடர்ந்து, அவர்கள் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது: ''எங்கள் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள், இருண்ட தமிழ்நாட்டை மீட்டெடுக்க முதல்வராக வேண்டும். தற்போது நிலவும் சூழலுக்கு தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் அரசியில் களத்திற்கு வந்தால்தான் தமிழகத்தைக் காப்பாற்ற முடியும். எனவே, ரஜினிகாந்த் முதல்வராக வேண்டியும் நீண்ட ஆயுள் பெறவும் 5ஆயிரம் பக்தர்களுக்கு கூழ் ஊற்றி மஞ்சள் , குங்குமம், மாங்கல்யக் கயிறு வழங்கினோம். மேலும், அம்மனுக்கு ரஜினிகாந்த் பெயரில் சிறப்பு பூஜையும் நடத்தினோம்'' என்று தெரிவித்தனர்.
 

ஆடி கடைசி வெள்ளி என்பதால், தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது . பக்தர்கள் அம்மனுக்கு நெய்விளக்கு வைத்து பூஜைசெய்தனர் மேலும், பொங்கல்வைத்து பிராசாதம் வழங்கினர். மேலும் தீச்சட்டி எடுத்தல், அம்மனுக்கு கண் மலர் வழங்குவது , 1000 கண் பானை வழங்குதல் உள்ளிட்ட பல வேண்டுதல்களை ஆடி கடைசி வெள்ளியான இன்று நேற்றிக்கடனைச் செலுத்தி அம்மனைத் தரிசித்தனர் .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!