கிருஷ்ண ஜெயந்தி: ராதை, கிருஷ்ணர் வேடத்தில் உலா வந்த 200 சிறுவர்கள்!

கிருஷ்ணர்

கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நெல்லையில் உள்ள பள்ளியில் 200 மாணவர்கள் ராதை, கிருஷ்ணர் வேடமணிந்து ஊர்வலமாகச் சென்றனர். 

ஆவணி மாதம் அஷ்டமி திதியில் கிருஷ்ணர் பிறந்த தினம், வரும் 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லையில் உள்ள வேதிக் வித்யாஷ்ரம் பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளிச் சிறுவர்கள் 200 பேருக்கு ராதை, கிருஷ்ணர் வேடம் அணிவிக்கப்பட்டது. அவர்கள் ஊர்வலமாக எட்டெழுத்துப் பெருமாள் கோயிலுக்குச் சென்றனர். அங்குள்ள மகாதேவர் கோபால கிருஷ்ணர் கோசாலைக்குச் சென்றனர்.

 

கிருஷ்ணர் ஊர்வலம்

அங்கு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அப்போது, ராதை மற்றும் கிருஷ்ணர் வேடம் அணிந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து சிறப்பு மரியாதைகள் செய்யப்பட்டன. பின்னர் பஜனை நடந்தது. அதனைத் தொடர்ந்து, வேடம் அணிந்த குழந்தைகளுக்கு வெண்ணெய் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், கிருஷ்ணரின் தசாவதாரத்தை நினைவுபடுத்தும் வகையிலான நிகழ்ச்சி நடைபெற்றது. ஊர்வலத்தில், ராமர், நரசிம்மர், பலராமர், கல்கி உள்ளிட்ட 10 அவதாரங்களைப் போன்ற வேடம் அணிந்த மாணவர்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!