அ.தி.மு.க-வில் ஒரு பதவிக்கு இரண்டு பேர்! - மானாமதுரை கலாட்டா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ மாரியப்ப கென்னடி, அ.தி.மு.க அம்மா பேரவைச் செயலாளராக தினகரனால் நியமிக்கப்பட்டிருப்பது, கட்சித் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், அதே பதவிக்கு வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் இருக்கிறார். இவர், முதல்வர் எடப்பாடி அணியைச் சேர்ந்தவர்.

மாரியப்ப கென்னடி, தினகரனின் தீவிர ஆதரவாளர். இவர்களுக்குள் நடக்கும் அரசியல் யுத்தம், தற்போது உச்சகட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து, சிவகங்கை மாவட்ட கட்சித் தொண்டர்களிடம் பேசும்போது, "அம்மா மறைவு, இவர்களுக்கெல்லாம் சுக்ர திசையாக அமைந்துவிட்டது. ஆட்சி இருப்பதால், அமைச்சர்கள் எடப்பாடி பக்கம் பக்கவாத்தியம் வாசிக்கிறார்கள். கட்சி எப்போதும் சசிகலா பக்கம்தான் இருக்கும். பி.ஜே.பி அதிகாரத்தைப் பயன்படுத்தி, கட்சியை ஓ.பி.எஸ், இ.பி.எஸ், தினகரன் அணி என மும்மூர்த்திகளாக உடைத்திருக்கிறது. பி.ஜே.பி இருக்கும் வரை அ.தி.மு.க இப்படித்தான் இருக்கும். அது வரைக்கும் நாங்களும் குழம்பிப்போய்தான் இருக்க வேண்டி வரும். ஆட்சியில் இருப்பவர்கள், வருமான வரிதுறைக்குப் பயப்படாமல் அனைவரும் ஒன்றுசேருங்கள். தொண்டர்கள் இருக்கும் வரை அ.தி.மு.க-வை அழிக்க முடியாது என்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!