உள்ளே பகை... வெளியே சிரிப்பு... திவாகரன், தினகரன் தடாலடி பேட்டிகள்

கடந்த 27-ம் தேதி, டி.டி.வி.தினகரனின் மாமியார் சந்தானலெட்சுமியின் படத் திறப்பு நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்ததும் தினகரன், திவாகரன் இருவரும் தனித்தனியாக பேட்டி கொடுத்தனர். தினகரன் பேட்டியில், ''எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராக சீறியதோடு, என்னைக் கட்சியிலிருந்து யாரும் நீக்க முடியாது. நான் பொதுக்கூட்டங்களில் பேசப்போகிறேன் என்பதற்காக சிலருக்கு பயம் வந்துவிட்டது. நான் நிச்சயம் மக்களையும் கட்சித்தொண்டர்களையும் சந்திக்கப்போகிறேன்'' என்று தடாலடியாக பேட்டி கொடுத்தார். ஆனால் திவாகரன் பேட்டியில், 'தினகரனை மனதில்வைத்தே பேட்டி கொடுத்தார்' என்கிறார்கள் உண்மையான ர...ர...க்கள்.

திவாகரன், தினகரன் தடாலடி பேட்டிகள்

நான், 1972 முதல் கட்சியில் இருக்கிறேன். புரட்சித்தலைவர் இறந்த பிறகு, அடுத்த 10 நாளில் மன்னார்குடியிலிருந்து சென்று ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்பு கொடுத்தோம். ஒட்டுமொத்த ஜெயலலிதாவின் பாதுகாப்பும் என் கையில் இருந்தது. அடுத்து, ஜெயலலிதா முதலமைச்சராகப் பொறுப்பேற்றதில் எனக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. ஆனால், எனக்கு கட்சியில் பதவியெல்லாம் வேண்டாம்; அதை நானும் விரும்பவில்லை. நான் விமர்சகராகவும் இல்லை. ஆலோசனை கேட்டால் நிச்சயம் கொடுப்பேன். அ.தி.மு.க கட்சி நடவடிக்கை பூஜ்ஜியமாக இருக்கிறது. அதனால் கட்சியை வழிநடத்துவதற்கு யார் முன்னெடுத்துவருகிறார்களோ, அவர்களது பக்கம் தற்போது இணைந்துள்ளேன். எடப்பாடி தலைமையிலான ஆட்சி நல்லாத்தான் போய்க்கிட்டு இருக்கு, ஜெயலலிதா எதிர்த்த திட்டங்கள் எல்லாம், வருவதுதான் புதிராத இருக்கிறது. ஆனால், கட்சியில் செயல்பாடுதான் பூஜ்ஜியமாக இருக்கிறது.

கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளர்கள் நிறையப் பேர் கூட்டம் நடத்த முடியாமல் வறுமையில் கஷ்டப்பட்டுவருகிறார்கள். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாகூட அரசு விழாவாகத்தான் நடத்துகிறார்கள். ஒருவருடமாக கட்சி சார்பில் கூட்டம் நடத்தப்படாமல், தலைமைக்கழகப் பேச்சாளர்கள் என்னிடம் வந்து குறை கூறுகிறார்கள். என்னிடம் வந்து கூறுவதற்குக் காரணம், நான் கட்சிப் பணியில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கிறேன் என்பதுதான் காரணம் என்றவர், இன்னும் மூன்று மாதத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார். 
திவாகரன் பேட்டிகுறித்து, அவரது ஆதரவாளர்களிடம் பேசினோம். ''பாஸ் பேசியது எல்லாம் தினகரனை மனதில் வைத்துதான், ஆரம்பதில் கட்சிக்காக கஷ்டப்பட்டவர்கள் இருக்கும்போது, இதுவரை ஒருமுறைகூட தினகரன் அண்ணனிடம் ஆலோசனை பெறவில்லை என்பதைத்தான், ஆலோசனை கேட்டால் நல்ல ஆலோசனை கொடுப்பேன்' என்று சொன்னார்.


'உள்ளே பகை; வெளியே சிரிப்பு என்பதாகத்தான் இருக்கிறது' என்கிறார்கள், படத் திறப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!