வெளியிடப்பட்ட நேரம்: 15:44 (11/08/2017)

கடைசி தொடர்பு:15:44 (11/08/2017)

டி.டி.வி.தினகரன் நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு..!

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் டி.டி.வி.தினகரன் ஆகஸ்ட் 16-ம் தேதி நேரில் ஆஜராக சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


1996-ம் ஆண்டு வெளிநாடுகளிலிருந்து தொலைக்காட்சி தொடர்பான சாதனங்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட 5 பேரின் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. அந்த வழக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டி.டி.வி.தினகரன், சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளித்திருந்தனர்.

மேலும் இந்த வழக்கில் சசிகலா, வீடியோ கான்பரன்ஸ் மூலம் விளக்கமளித்திருந்தார். இந்த நிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மலர்மதி, இந்த வழக்கில் ஆகஸ்ட் 16-ம் தேதி டி.டி.வி.தினகரன் நேரில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டார்.