வெளியிடப்பட்ட நேரம்: 16:27 (11/08/2017)

கடைசி தொடர்பு:16:55 (11/08/2017)

'எதுக்கிடியம்மா உனக்கு இந்த வேலை' - ஓவியாவுக்காக உருகிய பாட்டி! 

oviya


பிக் பாஸின் மிகப்பெரிய பலமாக இருந்தவர் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 'எனக்கு ஒரு பனானா, கிரீன் டீ பிளீஸ்' என கேமரா முன்பு கெஞ்சிக் கொஞ்சி கேட்பது முதல் ஓவியா வெளியேறும்போது உணர்ச்சிவசப்பட்டு நடந்து கொண்டவிதம் வரை தமிழக மக்களை ஒரு கலக்கு கலக்கி விட்டார் ஓவியா. ஆரவுடனான ஓவியா காதலை வைத்து மருத்துவ முத்தம் என்கிற வார்த்தையும் பரவலாக வைரலானது. இதனையடுத்து தற்போது, ஓவியாவின் சின்ன வயது படம், அவர் நடத்தப்படம், அவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என பல விஷயங்களை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வரிசையில் சில நாள்களுக்கு முன்பு வெளியான ஒரு வீடியோவில் பிக் பாஸ் ஓவியாவிற்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

அதில், ''அநியாயமா ஓவியா மனசைக் கெடுத்து தவிக்கவிட்டு, அழ வச்சுட்டானே. உலகமே ஓவியாவை கட்டைவிரலில் வைத்து தாங்கிப் பிடித்து, ஓட்டுப் போட்டு பல முறை காப்பாற்றியிருக்கிறது. ஆரவ் உனக்கு சரியான ஆள் இல்லை. ஜூலிதான், ஆரவுக்கு சரியான ஆள். எதுக்குடியம்மா உனக்கு இந்த வேலை. கடைசியில் வையாபுரியும், சிநேகனும் ஓவியாவுக்கு சரியா எடுத்து சொல்லி அறிவுரை சொல்லியிருக்காங்க. அவங்களுக்கு என் மனமாற நன்றி சொல்லிக்கிறேன்'' என சில இடங்களில் உணர்ச்சிவசப்பட்டு அந்த பாட்டியம்மா பேசியுள்ளார். இந்த வீடியோ கடந்த வாரத்திலிருந்து வைரலாகி வருகிறது. இதிலிருந்து தாய்மார்களின் ஆதரவும் ஓவியாவுக்கு இருக்கிறது எனவும், எங்களின் ஆதரவு எப்போதும் ஓவியாவுக்கு உண்டு எனவும் பலர் ட்விட்டரில் பதிந்து வருகிறார்கள்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க