Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டாஸ்மாக் வேண்டாமென்று கலெக்டரின் காலில் விழுந்த கிராம மக்கள்!

டாஸ்மாக் வேண்டாமென்று கலெக்டரின் காலில் விழுந்து கிராம மக்கள் கோரிக்கை வைத்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியுற வைத்தது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் புதிதாக அமையவிருக்கும் டாஸ்மாக் கடையை எதிர்த்து குடும்ப அட்டைகளை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்தபோதுதான் காலில் விழுந்தனர். இது சம்பந்தமாக ஊர்க்காரர்கள் நம்மிடம், ''எங்கள் ஊரில் இதுவரை டாஸ்மாக் கடை இல்லை. சில மாதங்களுக்கு முன் நகரத்தில் அடைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை எங்கள் ஊரில் திறக்க முயற்சி செய்தனர். அப்போது ஊர் மக்கள் அனைவரும் கலெக்டரிடம் கோரிக்கை வைத்து அதை நிறுத்தினோம்.

தற்போது அதே இடத்தில் மீண்டும் கடை வைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். அங்கு மதுக்கடை வந்தால், அப்பகுதியில் ஆடு, மாடு மேய்த்துப் பிழைக்கும் எங்கள் ஊர் மக்களுக்குப் பல பிரச்னைகள் வரும். குறிப்பாக பெண்களுக்குத் தொல்லைகள் ஏற்படும். கால்நடை மருத்துவமனைக்குச் செல்ல முடியாது. பல ஊர்களைச் சேர்ந்தவர்கள் குடிக்க இங்கே படையெடுத்து வந்தால், ஊர் நிம்மதி கெட்டுவிடும், அதனால் அக்கடையைத் திறக்கக் கூடாது என்று கலெக்டரிடம் மன்றாடியுள்ளோம். மீறித் திறந்தால் எங்களுடைய குடும்ப அட்டை, வாக்காளர் அட்டையை ஒப்படைத்துவிடுவோம்'' என்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement