மாணவர்களுக்கான 'தூய்மை தூத்துக்குடி’ ஓவியப்போட்டி!

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பள்ளி மாணவர்களுக்கான 'தூய்மை தூத்துக்குடி' என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில் 31 பள்ளிகளைச் சேர்ந்த 452 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

drawing

தூத்துக்குடி மாநகராட்சியைத் தூய்மைப்படுத்தும் விதமாகத் ’தூய்மை சேலஞ்ச்’ என்ற பெயரில் திட்டத்தை அறிமுகப்படுத்தி வார்டு மக்களிடம் பெறப்பட்டு வந்த குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்து ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மக்காத குப்பைகள், மற்ற நாள்களில் மக்கும் குப்பைகள் எனத் தனித்தனியாக மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் பெறப்பட்டு வந்தனர்.  

தொடர்ந்து குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கி வரும் வீடுகளுக்கு ஒரு கூப்பன் கொடுக்கப்பட்டு குலுக்கல் முறையில் வாரம் இருவருக்கு ஒரு கிராம் மதிப்புள்ள தங்க நாணயம் பரிசும் வழங்கப்பட்டு வருகிறது. தவிர, டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் வகையில் மாநகராட்சி பகுதிகள், பள்ளி, கல்லூரிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம், பள்ளி, கல்லூரி மாணவர்களைக் கொண்டு மாநகராட்சியின் முக்கிய இடங்களில் தூய்மைப்படுத்தும் பணி ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன.     

drawing

இதன் ஒரு பகுதியாகப் பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்புஉணர்வு ஏற்படுத்திடும் வகையில் ‘தூய்மைத் தூத்துக்குடி’ என்ற தலைப்பில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி மாநகநாட்சி அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் 31 பள்ளிகளைச் சேர்ந்த 452 மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர். 6 முதல் 8-ம் வகுப்பு வரை, 9 முதல் 10-ம் வகுப்பு வரை மற்றும் 11 முதல் 12-ம் வகுப்பு வரை என மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டு போட்டிகளில் வெற்றி பெறும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திரதின விழாவில் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!