ஐ.ஏ.எஸ் - 2018 இலவச பயிற்சி முகாம்- சென்னையில் 13-ம் தேதி நடக்கிறது

ஐ.ஏ.எஸ்-2018ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் ஆகஸ்ட் 13-ம் தேதி சென்னையில் நடக்கிறது.

விகடன் பிரசுரம் மற்றும் சாய் ஐ.ஏ.எஸ் இணைந்து நடத்தும் ஐ.ஏ.எ.ஸ்-2018 வழிகாட்டுதல் மற்றும் இலவச பயிற்சி முகாம் சென்னை ஐ.சி.எப் டாக்டர் அம்பேத்கர் அரங்கத்தில் ஆகஸ்ட் 13-ம் தேதி நடக்கிறது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கும் இந்தப் பயிற்சி முகாமில் தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் செயலாளர் டாக்டர் இரா.ஆனந்தகுமார் ஊக்க உரை ஆற்றுகிறார். முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அபுல்ஹாசன் தேர்வு ஆலோசனை வழங்குகிறார். டாக்டர் சங்கர சரவணன், தேர்வு பயிற்சி அளிக்கிறார். பாடத்திட்டம், முந்தைய ஆண்டு கேள்வித்தாள் குறித்து வகுப்பும் எடுக்கிறார்.

இதுகுறித்து போட்டித் தேர்வு நூல் எழுத்தாளரும் ஐ.ஏ.எஸ் தேர்வு பயிற்சியாளருமான டாக்டர் சங்கர சரவணன் கூறுகையில், ''யு.பி.எஸ்.சி நடத்தும் ஒங்கிணைந்த தேர்வுகளில் இந்திய ஆட்சி பணி என்னும் ஐ.ஏ.எஸ் அதிகாரி பணி இன்றைய இளைஞர்களின் கனவு பணி ஆக இருக்கிறது. ஆண்டுக்காண்டு ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தில் சமீபகாலமாக அதிக எண்ணிக்கையில் இத்தேர்வு எழுதுகின்றனர். தமிழ் வழியில் தேர்வு எழுதுவோர் எண்ணிக்கையும் கூடிக் கொண்டுதான் இருக்கிறது. ஐ.ஏ.எஸ் பணி உட்பட மொத்தம் 23 பணிகளுக்கு நடத்தப்படும் ஒருங்கிணைந்த தேர்வுதான் இந்திய குடிமைப் பணி தேர்வு. எந்த ஒரு  பட்டப்படிப்பு முடித்திருந்தாலும் இந்தத் தேர்வை எழுதலாம். இத்தேர்வு பற்றிய இலவச பயிற்சி முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடக்கிறது. அனுமதி இலவசம்'' என்றார்.  


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!