Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நடராசனின் அமைதிக்கு என்ன காரணம்?

தினகரனின் மாமியார் சந்தானலெட்சுமியின் படத்திறப்புக்கு வந்த எம்.நடராசன் யாரிடமும் அதிகம் பேசவில்லை. நிகழ்ச்சி முடியும்வரை அமைதியாக இருந்துவிட்டு அவர் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

தினகரனின் மாமியார் சந்தானலெட்சுமியின் படத்திறப்பு நிகழ்ச்சி இன்று தஞ்சாவூரில் நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்க எம்.நடராசன் முற்பகல் 11 மணியளவில் வந்தார். அவரை திவாகரன் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். முன்வரிசையில் தினகரன் அமர்ந்திருந்தார். அவரும் நடராசனுக்கு வணக்கம் செலுத்தினார். தினகரன் அமர்ந்திருந்த இரண்டு இருக்கைக்கு அருகே காலியாக இருந்த சேரில் நடராசன் அமர்ந்திருந்தார். யாரிடமும் அதிகம் பேசவில்லையாம். சந்தானலெட்சுமியின் படம் திறக்கப்பட்டதும் நடராசன், மேடையில் ஏறி மலர்களைத் தூவினார். பிறகு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அப்போது மீடியாக்கள் அவரைச் சுற்றி வளைத்தபோதும் எதுவும் பேசாமல் சென்றுவிட்டார்.

நடராசனின் அமைதிக்கு என்ன காரணம் என்று சசிகலா குடும்பத்தினரிடம் கேட்டபோது, தினகரனுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் ஏதாவது, பேசினால் அது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கருதியே அவர் அமைதியாக இருப்பதாகத் தெரிவித்தனர்.

நடராசனுக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், "சில மாதங்களாக நடராசன் சிகிச்சையில் இருக்கிறார். படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் வந்தார். அங்கு அரசியல் பேச வேண்டாம் என்று கருதியே அமைதியாக புறப்பட்டுச் சென்றுவிட்டார். தற்போது நடந்து வரும் அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பாக ஆலோசித்து வருகிறார். விரைவில் அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவார்" என்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement