சிலை கடத்தியவர்களுக்கு வலை: விசாரணையில் இந்துசமய அதிகாரிகள்!

பழைமை வாய்ந்த கோயில்களின் நகைகளையும், சிலைகளையும் கடத்திவிட்டார்கள் என தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரைச் சேர்ந்த வெங்கட்ராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் 10-க்கும் மேற்பட்ட இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

  விசாரணையில் இந்துசமய அதிகாரிகள்

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூரில் ஸ்ரீபசுபதீஸ்வரர் சிவன் கோவிலும் ஆதிகேசவபெருமாள் கோவிலும் உள்ளன. இந்து சமயஅறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த இரண்டு கோயில்களுக்கும் நிலங்கள், நகைகள், ஐம்பொன்சிலைகள் உள்ளன. இந்தக் கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள 73 கோயில்களில் பழைமை வாய்ந்த ஐம்பொன்சிலைகள் பாதுகாப்பு கருதி பசுபதீஸ்வரர் கோயிலில் பல ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்தன. 


ஐம்பொன் சிலைகளை உலோகத் திருமேனி பாதுகாப்பு மையத்தில் வைக்க வேண்டுமென்ற உயர்நீதிமன்ற உத்தரவை, இங்குள்ள அதிகாரிகள் பின்பற்றவில்லை. இதனால் கோயில் அலுவலராக செயல்பட்டு வந்த கனகராஜ் கணக்கெடுத்த போது 6 சிலைகள் காணவில்லை என்பது தெரியவந்தது. ஆனால், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும், அலுவலர்களும் மறைத்துவிட்டனர் எனக் காவல்துறையில் புகார் அளித்துள்ளார் வெங்கட்ராமன். 


புகாரின் அடிப்படையில், இணை ஆணையர், உதவி ஆணையர், செயல் அலுவலர் உள்ளிட்ட 10 அறநிலையத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!