வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (11/08/2017)

கடைசி தொடர்பு:20:30 (11/08/2017)

தங்கப்பதக்கங்களைக் குவித்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்கள் !

 

 

குள்ளமான மாற்றுத்திறனாளிகளுக்கு இடையேயான உலக அளவிலான விளையாட்டு போட்டி 7-வது முறையாக கனடாவில் நடைபெற்றது . இந்தப் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். குள்ளமான மனிதர்களுக்கு இடையான இந்தப் போட்டி பல பிரிவுகளில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் இந்தியாவில் இருந்து மொத்தம் 18 வீரர் , வீராங்கனைகள் கலந்துகொண்டனர் , அதில் தமிழகத்திலிருந்து 3 வீரர்கள் கலந்துகொண்டனர் ,

 

தமிழகத்தின், புதுக்கோட்டையைச் சேர்ந்த செல்வராஜ் கிளாஸ் 1பிரிவில், ஈட்டி எரிதலில் போட்டியில் தங்கமும், மதுரை அச்சம்பத்து பகுதியைச் சார்ந்த மனோஜ் ’கிளாஸ்- 2’ ஈட்டி எரிதல் பிரிவில் தங்கமும் , வட்டு மற்றும் குண்டு எரிதலில் வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளார்கள். மேலும் மதுரை உசிலம்பட்டி பகுதியைச் சார்ந்த கணேஷ் ’கிளாஸ்- 3’ பிரிவில் , குண்டு எரிதல் , ஈட்டி எரிதல் ஆகிய மூன்று போட்டிகளிலும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர் .

’பல்வேறு நாடுகள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று வீரர்களும் வெற்றிவாகை சூடியுள்ளது தமிழர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது . இந்த மூன்று வீரர்களுக்கும் தங்க மகன் மாரியப்பனுக்குப் போன்று பரிசுகளும், அங்கீகாரமும் வழங்கி கவுரவப்படுத்த வேண்டும்’ என்று மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளின் பயிற்சியாளர் ரஞ்சித் கேட்டுக்கொண்டார் .