முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணித் தேர்வு முடிவுகள் வெளியீடு!

முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்கான நேரடிப் பணித் தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று மாலை வெளியிட்டுள்ளது. 

ஆசிரியர் பணி தேர்வு

ஆசிரியர் தேர்வு வாரியம் காலியாக உள்ள 3,375 முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் இடங்களுக்கான தேர்வை ஜூலை இரண்டாம் தேதி நடத்தியது. இந்தத் தேர்வில் 2,18,492 ஆசிரியர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள். 2,00,299 பேர் தேர்வை எழுதி இருந்தார்கள். 19.07.2017 அன்று கேள்விகளுக்கு விடைகளை அறிவித்திருந்தது ஆசிரியர் தேர்வு வாரியம். தேர்வு எழுதி இருந்தவர்கள் சரியான விடைகள் குறித்து ஏதேனும் ஆட்சாபணை இருந்தால் அதைத் தெரிவிக்கவும் குறிப்பிட்ட கால அளவை தேர்வு வாரியம் வழங்கியிருந்தது. 

இத்தேர்வுக்கான தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள் தங்களுடைய விடைத்தாளைப் பார்த்து சரியான விடைக்கு மதிப்பெண் கிடைத்திருக்கிறதா என்பதையும் சரிபார்த்துக்கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டிருக்கிறது. 

தேர்வு முடிவை www.trb.tn.nic.in தளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். அண்மையில் மாற்றுத்திறனாளிக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நான்கு சதவிகித இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் நான்கு சதவிகித  இட ஒதுக்கீடுகள் காலியிடங்களாக வைக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து இருக்கிறது. தேர்ச்சி பெற்றவர்கள் இட ஒதுக்கீட்டின் படி சான்றிதழ் சரிபார்த்தலுக்கு 28.08.2017 மற்றும் 29.08.2017 அன்று அழைக்கப்பட இருக்கிறார்கள் என்றும் தெரிவித்திருக்கிறது ஆசிரியர் தேர்வு வாரியம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!