Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வங்கியில் கொள்ளை முயற்சி: 20 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் தப்பியது!

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பகுதியில் உள்ள ஐ.ஓ.பி வங்கியில் கொள்ளை முயற்சி. வங்கியின் பின் பக்கக் கதவை உடைத்து வங்கியினுள் ஹெல்மெட் அணிந்து சென்ற கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முடியாததால் பணமும், நகையும் தப்பின.

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியில் உள்ள ஐ.ஓ.பி வங்கிக் கிளையில் அதிகமான மக்கள் தங்கள் நகை மற்றும் பணத்தைப் பாதுகாப்பு கருதி சேமித்து வைத்துள்ளார்கள். இந்நிலையில் நேற்று இரவு சரியாக 1 மணி அளவில் வங்கியின் மாடியில் உள்ள ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே புகுந்த 2 மர்ம நபர்கள் வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை அணைத்து விட்டு வங்கியிலிருந்த லாக்கரை உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் லாக்கரை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். காலையில் வழக்கம்போல் வங்கி ஊழியர்கள் பணிக்கு வந்து வங்கியைத் திறந்து பார்த்தபோது மாடியில் உள்ள கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அதன் பின்னர் கொள்ளை முயற்சி நடைபெற்றிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி போலீஸ் ஸ்டேஷனுக்குப் புகார் அளிக்கப்பட்டது. அங்கு வந்த போலீஸார் கண்காணிப்புக் கேமரா பதிவு , கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். லாக்கரை உடைக்க முடியாததால் அதில் வைக்கப்பட்டிருந்த 20 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும்  50 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை தப்பின. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement