Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மழையால் பாதியில் ரத்தான முரசொலி பவளவிழா..!

முரசொலி பவளவிழா நிகழ்வின் இறுதிநாள் விழா மழையின் காரணமாகப் பாதியில் நிறுத்தப்பட்டது. 

முரசொலி பவளவிழா


தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலி செய்தித்தாளின் 75-வதுஆண்டை மு.க.ஸ்டாலின் பவளவிழாவாகக் கொண்டாடி வருகிறார். இரண்டு நாளாக நடைபெற்ற அந்த விழாவில் மூத்த பத்திரிக்கையாளர்கள், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். நேற்று நடைபெற்ற விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் பத்திரிக்கை ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற நிறைவு நாள் விழாவில் முரசொலி பவளவிழா புத்தகம் வெளியீட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் நல்லக்கண்ணு, முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆனால், நிகழ்ச்சி தொடங்கிய சிறிது நேரத்திலேயே மழை கொட்டியது. கொட்டும் மழையிலேயே பவளவிழா புத்தகம் வெளியிடப்பட்டது. மழை தொடர்ந்து கொட்டியதால் பாதியிலியே நிறுத்தப்பட்டது. மேலும் இந்த நிறைவுவிழா இன்னொரு நாளில் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement