டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு !

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு முடிவுகளை இன்று மாலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

tnpsc

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் 19 துணை ஆட்சியர் உட்பட 74 பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு சமீபத்தில் நடந்தது.நேர்முகத் தேர்வில் தேர்வானவர்களுக்கான முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டன.

துணை ஆட்சியர் பணி உள்பட பல அரசுப் பணியிடங்களுக்கான இத்தேர்வில் சென்னையைச் சேர்ந்த காய்த்ரி என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை மணிராஜ் என்பவரும், மூன்றாம் இடத்தை தனப்பிரியா என்பவரும் பெற்றுள்ளார். தேர்வானவர்களுக்கு விரைவில் பணி ஆணை வழங்கப்படும். 

இன்று வெளியான இந்த குரூப்-1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ இணையதளப் பக்கத்தில் காணலாம். http://www.tnpsc.gov.in  என்ற இணையதளத்தில் சென்று தேர்வர்கள் தங்கள் முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம் எனத் தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Tamil ஜெயிக்கலாம் ஈசியா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!