Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திலீப் வழக்கில் போலீஸூக்கு சிக்கல்

 

மலையாள நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் கடந்த மாதம் 10-ம் தேதி கைது செய்யப்பட்டார். ஆலுவா சப் ஜெயிலில் அவர் அடைக்கப்பட்டு ஒரு மாதம் ஆகிறது. மிக முக்கியமான வழக்குகளில் கைது செய்யப்படுவர்களை 90 நாள்கள் வரை  தான் காவலில் அடைக்க சட்டத்தில் இடம் உண்டு. அதனால் திலீப்பையும் 90 நாள்கள் வரை காவலில் வைக்க அனைத்து நடவடிக்கைகளையும் கேரள போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். 90  நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால் கைது செய்யப்பட்டவருக்கு ஜாமீன் கிடைக்கும். அதனால் விரைவில் கேரள போலீஸார் திலீப் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தயாராகி வருகின்றனர்.

குற்றப்பத்திரிகையில் முதல் குற்றவாளியாக பல்சர் சுனிலும் இரண்டாவது குற்றவாளியாக நடிகர் திலீப்பையும் சேர்க்க கேரள போலீஸார் முடிவு  செய்துள்ளனர். மேலும் திலீப்புக்கு எதிராக பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாம். இந்த நிலையில் மீண்டும் ஜாமீன் கேட்டு மூன்றாவது முறையாக கேரள உயர்நீதிமன்றத்தில் திலீப் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஏற்கெனவே திலீப்பின் ஜாமின் மனுவை  அங்கமாலி மாஜிஸ்திரேட் நீதிமன்றமும் கேரள உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. திலீப்பின் நீதிமன்ற காவலும் முடிவடைந்துவிட்டது.

இதற்கிடையில் மீண்டும் ஜாமின் கேட்டு நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஜாமின் மனுவில்  காவல்துறைக்கு சிக்கலை ஏற்படுத்தும் கருத்துக்களை குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. திலிப் தாக்கல் செய்துள்ள மனுவில் 'பல்சர் சுனில் சிறையில் இருந்து நடிகர் திலீப்புக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் தனக்கு பேசியபடி ஒன்றறை கோடி பணம் உடனடியாக வேண்டும் என்று தெரிவித்துஇருந்தார். இந்தக் கடிதத்தை பல்சர் சுனிலுடன் ஒன்றாக ஜெயிலில் இருந்த விஷ்ணு என்பவர் திலிப்பின் மேனேஜர் அப்புண்ணயிடம் கொடுத்தார்.

இதேப்போல் பல்சர் சுனில் ஜெயிலில் இருந்து அப்புண்ணியிடம் பணம் கேட்டு மிரட்டினார். இதுகுறித்து இரண்டு வாரங்களுக்கு பின்னரே திலீப் போலீஸில் புகார் கொடுத்தார். ஆனால் போலீஸார் அந்தப் புகார் தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. மிரட்டல் கடிதம் மற்றும் போன் வந்து பல நாட்கள் ஆனதால் வழக்குப் பதிவு செய்யவில்லை என போலீஸார் தெரிவித்திருந்தனர்.

மிரட்டல் போன் வந்த அன்றே டி.ஜி.பிக்கு  போனில் பதிவு செய்த ஆடியோவை வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்து விட்டதாகவும், இந்த வழக்கை விசாரிக்கும் ஏ.டி.ஜி.பி சந்தியாவுக்கும் மஞ்சுவாரியருக்கும் நெருங்கியத் தொடர்ப்பு உண்டு என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்த ஜாமீன் மனு விசாரணைக்கு வரும் போது போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படலாம் என தெரிகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement