Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நேற்று மூக்குப்பொடி சாமியார்... இன்று தஞ்சை பெரியகோயில்..! தினகரனின் ஆன்மிக தேடல்

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் அடுத்தடுத்து, தனக்கு நெருக்கடிகள் கொடுத்து வந்தாலும், சற்றும் சளைக்காமல் ஆன்மிக தேடலை தினமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறா டி.டி.வி.தினகரன். 

 தினகரனின் ஆன்மீக தேடல்


கடந்த இருதினங்களுக்கு முன்னர் சென்னையிலிருந்து திருவண்ணாமலை வந்த தினகரன் மூக்குப்பொடி சாமியாரை சந்தித்து ஆசிபெற்றுதான் தஞ்சாவூருக்குச் சென்றார். தஞ்சாவூருக்குச் சென்றதும், செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், அ.தி.மு.கவிலிருந்து யாராலும் என்னை நீக்கமுடியாது என்று தெரிவித்தார். இந்நிலையில், இன்று தன்னுடைய மாமியார் சந்தானலெட்சுமியின் படத்திறப்பு விழாவில் கலந்துகொண்ட தினகரன், தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 12 பேருடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, 'நான் யாருக்கும் பயப்படபோவதில்லை. அவர்கள்தான் மடியிலே கனத்தை வைத்துக்கொண்டு பயப்படுகிறார்கள். எதுநடந்தாலும் என்னுடைய கட்சிப்பணி மற்றும் பொதுக்கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறும்' என்றார்.


அரசியல் தலைவர்கள், அரசியலில் நியூ என்ட்ரி கொடுப்பவர்கள், என யாராக இருந்தாலும் தஞ்சாவூர் பெரியகோயிலுக்கு நுழைவதையே சென்டிமென்ட்டாகக் கருதுவார்கள். காரணம், தஞ்சை பெரியகோயிலுக்குள் சென்றால் அரசியலில் தான் நினைத்த உயரத்தை எட்டமுடியாது என்ற சென்டிமென்ட் ஆரம்பகாலம் முதல் இருந்துவருகிறது. இதையெல்லாம் எடுத்துச் சொல்லியும் தினகரன் அதை மறுத்துவிட்டு குடும்பத்துடன் தஞ்சை பெரிய கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து வந்திருக்கிறார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement