Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை அருகே நடுரோட்டில் பற்றி எரிந்த அரசுப் பேருந்து! உயிர் தப்பிய பயணிகள்

bus fire accident 

பூந்தமல்லி அருகே கர்நாடக மாநிலத்துக்குச் சொந்தமான அரசு சொகுசுப் பேருந்து ஒன்று நடுரோட்டில் பற்றி எரிந்தது. அதிஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். அரசுப் பேருந்து பற்றி எரிந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கர்நாடக மாநில அரசின் சொகுசுப் பேருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே திருமழிசை என்ற இடத்தில் பேருந்து வந்தபோது, பேருந்தின் பின்புறம் திடீரென தீப்பற்றி எரிந்தது. பேருந்தின் பின்புறம் பரவிய தீ மளமளவென பற்றி எரிந்தது. உடனடியாகப் பேருந்து நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர் பகுதியிலிருந்து வந்த தீயணைப்புப் படை வீரர்கள், பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எப்போதும் பரபரப்பாக, வாகனங்கள் நிறைந்த சாலையில் பேருந்து தொடர்ந்து எரிந்து கொண்டு இருந்ததால் அங்கு போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement