Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'வேளாண்துறையில் இரண்டாம் பசுமைப் புரட்சி'- கரூர் கலெக்டர் சொல்கிறார்

"வேளாண்துறையில் இரண்டாம் பசுமைப்புரட்சியை தமிழக அரசு கொண்டு வந்திருக்கிறது" என்று கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

எருமார்ப்பட்டி ஊராட்சியில் உள்ள விவசாயி ஒருவரது நிலத்தில் மானியத்தில் அமைக்கப்பட்ட சூரிய ஒளியில் இயங்கும் மின்மோட்டார் அமைப்பைப் பார்வையிட்ட கலெக்டர் கோவிந்தராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  "முதலமைச்சரால் உணவு உற்பத்தியில் இரண்டாம் பசுமைப்புரட்சியை ஏற்படுத்தும் விதமாகப் பல்வேறு வகையான நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அத்திட்டங்கள் அனைத்தையும் முழு அளவில் செயல்படுத்தி வருகிறார். அரசின் திட்டங்களை விவசாயிகள் நூறு சதவிகிதம் பெற்று பொருளாதார முன்னேற்றம் பெறும்வகையில் வேளாண்மைத்துறை திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமன்றி, விவசாயிகளுக்குத் தேவையான வேளாண் உபகரணங்கள் மற்றும் பயன்படுத்தும் முறை போன்றவற்றை வேளாண் பொறியியல் துறை பயிற்சியுடன் விவசாயிகளுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதேபோல,தோட்டக்கலைத்துறை விவசாய நிலப் பகுதிகளில் தண்ணீர் தேவையறிந்து மிகக் குறைந்த அளவு தண்ணீரில் சொட்டுநீர்ப் பாசனமுறையில் அதிக மகசூல் பெறுகிற பயிர் வகைகளைப் பயிரிட அறிவுறுத்துவதுடன், விவசாயிகளுக்கு உறுதுணையாக இருந்து மானியத்தில் வழங்கும் திட்டங்களை எடுத்துரைத்து, அந்தத் திட்டங்கள் விவசாயிகளுக்குச் சென்றடையும்விதமாக செயல்பட்டு வருகிறது.

மேலும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் விவசாய நிலப்பகுதிகளின் மண்ணின் தன்மையை எடுத்துரைத்து அதற்கேற்ற பயிர் வகைகளைப் பயிரிட தக்க ஆலோசனை வழங்கி வருகின்றனர். கூடவே, இணைத்தொழில் அமைத்திடும் வகையில் விவசாயிகளுக்குக் கால்நடை பராமரிப்புத்துறை, பட்டு வளர்ப்புத்துறை, மீனவளத்துறை, வனத்துறை போன்ற துறைகளும் வேளாண்மைத்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு விவசாயிகள் வேளாண் உற்பத்தியில் சாதனை படைப்பதுடன், இணைப்புத் தொழில்களிலும் சாதனை படைத்திட உறுதுணையாக செயல்பட்டு வருகின்றன. அதேபோல், கரூர் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் கடந்த 6 ஆண்டுகளில் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மற்றும் ஓடுநீர் மேலாண்மை திட்டத்தின் மூலம் ரூ.78.09 லட்சம் மதிப்பில் கழிவுநீர்க் குட்டை, தடுப்பணை, செயற்கை முறை செறிவூட்டும் திட்டத்தின் கீழ் கழிவுநீர்க்குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் சார்பாக ரூ.309 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பில் டிராக்டர்கள், பவர் டில்லர், சுழற்கலப்பை உள்ளிட்ட 695 வேளாண் கருவிகள் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்கு உதவும் வகையில் வேளாண் இயந்திரங்கள் உபயோகிப்பாளர் வாடகை கருவி மையம் நான்கு அமைத்திட ரூ.60 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. இம்மையத்தில், டிராக்டர், கலப்பை, ரோட்டோவேட்டர், பல்பயிர் கதிரடிக்கும் இயந்திரம், வைக்கோல் கட்டும் கருவி, பண்ணைக்கழிவுகளைத் தூளாக்கும் கருவி ஆகியவை வாடகைக்குக் கிடைக்கும். மேலும், வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் ரூ.14.66 லட்சம் மதிப்பில் 27 கருவிகள் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன. கூடவே, டிராக்டர், கலப்பை, ரோட்டோவேட்டர், பல்பயிர் கதிரடிக்கும் இயந்திரம் ,வைக்கோல் கட்டும் கருவி, பண்ணைக்கழிவுகளைத் தூளாக்கும் கருவி ரூ. 40 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன. சூரிய ஒளியில் இயங்கும் மின் மோட்டார் (சோலார் பம்பு) 74 விவசாயிகளுக்கு ரூ.231.33 லட்சம் மதிப்பில் மானியம் வழங்கப்பட்டு, அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் 28.60 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் செய்வதற்காக ரூ.53.11 லட்சம் மானியத்தில் சொட்டுநீர் அமைப்புகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன. பாசன பகுதி மேன்மைத் திட்டத்தின் கீழ் 10003.93 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்வதற்காக 137.99 லட்சம் மதிப்பில் காரை வாய்க்கால் மற்றும் நீர் பகிர்மான தொட்டிகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், சூரிய ஒளியில் இயங்கும் மின் உலர்த்தி ரூ.4.84 லட்சம் மானியத்தில் இரண்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
      
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement