மு.க.ஸ்டாலின் இன்று லண்டன் பயணம்!

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 9.45 மணிக்கு விமானம் மூலம் லண்டன் செல்கிறார். 

ஸ்டாலின்


சட்டமன்றக் கூட்டத்தொடர், ஏரி குளங்கள் தூர் வாருதல், கருணாநிதி பிறந்தநாள், சட்டமன்றத்தில் கருணாநிதி வைரவிழா, முரசொலி பவள விழா என்று கடந்த சில மாதங்களாக பரபரப்பாக இருந்த எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு லண்டன் செல்கிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து இரவு 9.45 மணி விமானத்தில் அவர் புறப்படுகிறார். அவருடன் மருமகன் சபரீசன், ஸ்டாலின் குடும்ப நண்பர் கார்த்திக் ஆகியோர் உடன் செல்கிறார்கள். 8 நாள் லண்டன் பயணத்தை முடித்துவிட்டு வரும் 20-ம் தேதி ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

இந்நிலையில், மதுரையிலிருந்து மு.க.அழகிரி, அவரது குடும்பத்தோடு நேற்று மாலை சென்னை வந்தார். உடல் நிலை சரியில்லாமல் வீட்டில் ஓய்வில் இருக்கும் தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனையும் கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருக்கும் கருணாநிதியையும் பார்க்க முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. தமிழக அரசியலில் மிகவும் பரபரப்புத் தொற்றிக்கொண்டிருக்கும் நிலையில், ஸ்டாலின் லண்டன் பயணம் பரபரப்பாகப் பேசப்படுகிறது. அங்கு ஏதேனும் ரகசிய சந்திப்புக்கு ஏற்பாடு இருக்குமோ என்ற பேச்சும் கிளம்பியிருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!