மாணவர்கள் சேர்க்கை இல்லை: பொறியியல் கல்லூரிகளை மூட உத்தரவு!

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான பொதுக் கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில் போதுமான மாணவர் சேர்க்கை இல்லாத கல்லூரிகளுக்கு செக் வைக்கத் தயாராகி வருகிறது அகில இந்திய தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான அமைப்பு (ஏ.ஐ.சி.டி.இ). 

பொறியியல் கலந்தாய்வு


'கடந்த ஐந்தாண்டுகளில் 30 சதவிகிதத்திற்கும் குறைவான மாணவர் சேர்க்கை நடைபெற்ற பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகளை மூடுவது குறித்து ஆலோசிப்பதாக' அகில இந்திய தொழில்நுட்பக் கல்லூரி கழகமான ஏ.ஐ.சி.டி.இ தெரிவித்துள்ளது. 

'நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 27 லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் காலியாக உள்ளது' என அகில இந்தியத் தொழில் நுட்பக் கல்விக்குழுமத்தின் தலைவர் பேராசிரியர் அனில் தத்தாத்ரேயா சஹாஸரபுக்தே தெரிவித்து இருக்கிறார். 

பொறியியல் கல்வி

'கடந்த சில ஆண்டுகளாகப் பொறியியல் கல்லூரிகளின் தரம் குறைந்து வருவதாகவும், போதுமான வசதிகளின்றி செயல்படுவதாகவும், இதைக் கருத்தில்கொண்டு சில கல்லூரிகளை மூட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும்' தெரிவித்தவர், 'அடுத்தாண்டு முதல் இந்த நெறிமுறை நடைமுறைப்படுத்தப்படும்' என்றும் கூறினார். 

இந்தாண்டு தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வில் 150 கல்லூரிகளில் 30 சதவிகிதத்துக்கும் குறைவான இடங்களே நிரம்பியிருக்கின்றன. இந்தாண்டு 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 100 மாணவர்களுக்குக் குறைவாகவே மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!