Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இலங்கையில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த தமிழர்கள் கைது!

இலங்கையில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த தமிழர்கள் 3 பேரை அந்நாட்டுக் கடற்படையினர் கைது செய்தனர். 

இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழர்கள்


சாமாந்துரையை அடுத்த நிந்தாவூர் பகுதியில் சோதனை நடத்திய கடற்படை அதிகாரிகள், அந்தப் பகுதியில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்தவர்களைக் கைது செய்தனர். அவர்களை சமாந்துரை போலீஸாரிடம் கடற்படை அதிகாரிகள் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்டவர்கள் 27, 36 மற்றும் 46 வயதுடையவர்கள் என்றும், சுற்றுலா விசா மூலம் இலங்கை வந்த அவர்கள், விவசாயம் செய்துவந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சாமாந்துரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இலங்கையின் குடியேற்றத் துறை சட்டத்தை மீறியதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இலங்கைப் பகுதியில் மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுவது அன்றாட நிகழ்வாகி வருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement