Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பொறியியல் கலந்தாய்வில் கலந்துக்கொள்ள மீண்டும் வாய்ப்பு!

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையின் பொது கலந்தாய்வின் முடிவில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு, இதுவரை பொறியியல் கலந்தாய்வில் கலந்துக்கொள்ளாதவர்களும், சிறப்பு துணை தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதி பெற்றவர்களும்  சிறப்பு பொறியியல் கலந்தாய்வு 17.08.2017 அன்று நடைபெற இருக்கிறது. இந்த கலந்தாய்வில் கலந்துக்கொள்ள மாணவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். 

பொறியியல் கலந்தாய்வு

இந்த சிறப்பு கலந்தாய்வில் கலந்துக்கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு மற்றும் சேர்க்கை மையத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். 12-ம் வகுப்பு பொது மற்றும் தொழிற்கல்வி பயின்ற தகுதியானவர்கள் 16.08.2017 மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பித்தும், பதிவும் செய்து விட வேண்டும். விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த நாளே (17.08.2017) கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.

கலந்தாய்வின் போது 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், 12-ம் வகுப்பின் பொது தேர்வுக்கான ஹால் டிக்கெட், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், நிரந்தர சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், முதல் பட்டதாரிக்கான சான்றிதழ் போன்றவற்றின் அசல் சான்றிதழ்களுடன் அதன் நகல்களையும் எடுத்து வர வேண்டும்.  விண்ணப்பத்தொகை ரூ.500. தாழ்த்தப்பட்டோர், பழங்குடி பிரிவினருக்கு ரூ.250 ரூபாய் மட்டுமே.

ஏற்கனவே கல்லூரியில் சேர்ந்தவர்களும் இந்த கலந்தாய்வில் கலந்துக்கொள்ளலாம். அவ்வாறு கலந்துக்கொள்ளும்போது தற்போது படித்துவரும் கல்லூரியின் முதல்வரிடமிருந்து அத்தாட்சி சான்றிதழ் (Bonafide Certificate) வாங்கி வர வேண்டும்.   

கலந்தாய்வில் கலந்துக்கொள்வதற்கு முன்பு, எந்த கல்லூரியில் சேர தேர்ந்தெடுக்க இருக்கிறீர்கள் என்பதையும், அந்த கல்லூரியில் தேர்ந்தெடுக்க ஆர்வம் உள்ள பிரிவில் எத்தனை காலியிடங்கள் இருக்கின்றன என்ற விவரங்களை https://www.tnea.ac.in/ என்ற இணையத்தளத்தில் பார்த்துவிட்டு வருவது நல்லது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement