Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரத்னா ஸ்டோர் உள்ளிட்ட 222 கடைகளுக்குச் சீல்: திருச்சியில் அதிகாரிகள் அதிரடி

திருச்சி ரத்னா ஸ்டோர்ஸ் கட்டடம் உரிய அனுமதியின்றி கட்டப்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சீல் வைக்க உத்தரவிட்டதை அடுத்து சட்டத்துக்குப் புறம்பாகக் கட்டப்பட்ட ரத்னா ஸ்டோர் உள்ளிட்ட 222 கடைகளுக்கு இன்று சீல் வைக்கப்பட்டது.

திருச்சி, மலைக்கோட்டை மற்றும் பெரிய கடைவீதி, திருச்சி என்.எஸ்.பி. சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரு வணிக நிறுவனங்கள், கட்டடங்களை விதிகளை மீறிக் கட்டியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இந்நிலையில், திருச்சி என்.எஸ்.பி. சாலையில் ரத்னா ஸ்டோர்ஸ் கட்டடம் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதாக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆயிஷாபேகம் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் மனுவில், "ரத்னா ஸ்டோர்ஸ் நிறுவனம், இரண்டு அடுக்குக் கட்டடம் கட்டுவதற்கு மட்டும் அனுமதி பெற்றுவிட்டு, நான்கு மாடிக் கட்டடத்தை கட்டியுள்ளது" என்று குற்றம்சாட்டப்பட்டது.
 

கடைகளுக்குச் சீல்

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, விதிமுறையை மீறிக் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தை மூடி சீல் வைக்க திருச்சி உள்ளூர் திட்டக்குழுமத்துக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலை திருச்சி உள்ளூர் திட்டக்குழு உறுப்பினர் செயலர் கைலாசம் தலைமையில் அதிகாரிகள், விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கடையை மூடி சீல் வைக்கச் சென்றனர். பெரிய வணிக நிறுவனங்களின் கட்டடங்களை அதிகாரிகள் சீல் வைக்க வந்ததையடுத்து, பாதுகாப்புக்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து, அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைக்க வந்திருப்பது குறித்து கடையின் நிர்வாகிகளுக்கு அறிவித்தனர். பின்னர் கடையின் பிரதான வாயில் ஷெட்டர்களை மூடி, பூட்டுப்போட்டு சீல் வைத்தனர். மேலும், அதன்மேல், அனுமதிக்கு மாறாக மற்றும் கூடுதலாக கட்டப்பட்டுள்ள இக்கட்டடம் நகர் ஊரமைப்புச் சட்டம் 1971ன் கீழ் மூடி முத்திரையிடப்பட்டுள்ளது என்கிற அறிவிப்பு ஒட்டினார்கள்.

கடைகளுக்குச் சீல்

திருச்சி என்.எஸ்.பி சாலையில் உள்ள ரத்னா ஸ்டோர்ஸ் நீதிமன்ற உத்தரவின்படி மூடி சீல் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாலாஜி டவர்ஸில் அமைந்துள்ள கடைகள், என்.எஸ்.பி சாலையில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட கட்டடங்களில் இயங்கிய கடைகள் என மொத்தம் 222 கடைகளுக்கு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இந்தச் சம்பவம் திருச்சியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement