Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

போனில் புகார் கூறிய நோயாளிகள்... களத்தில் இறங்கிய எம்எல்ஏ... அதிர்ந்த அரசு டாக்டர்கள்

குமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியில் கருங்கல் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் சுமார் 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் தற்போது அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை எனக் கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாருக்குப் புகார் வந்ததைத் தொடர்ந்து நேற்று ஆய்வுப் பணியை மேற்கொண்டார். அப்போது ஆறு டாக்டர்களில் இரண்டு பேர் மட்டுமே பணியில் இருப்பதும், நோயாளிகளுக்குத் தகுந்த சிகிச்சை கிடைக்காமல் இருப்பது தெரியவந்தது. மேலும், அடிப்படை வசதிகள் இல்லாததை மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளும் பொதுமக்களும் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாரிடம் புகாராக தெரிவித்தனர்.

போதுமான நர்சுகளும், துப்புரவுப் பணியாளர்களும் மருத்துவமனையில் இல்லை. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் சுத்தமாக இல்லை. நோயாளிகள் படுக்கும் பெட்டில் உள்ள துணிகள் துவைக்கப்படாமல் அழுக்காக இருக்கின்றன. நோயாளிகள் சிகிச்சை பெறும்  வார்டும் சுகாதாரமாக இல்லை. கழிப்பறையும் சுத்தமில்லாமல் துர்நாற்றம் வீசுக் கொண்டிப்பது போன்ற பிரச்னைகளை சரி செய்ய தலைமை மருத்துவர் சதீஷிடம், எல்.எல்.ஏ. ராஜேஷ்குமார் கோரிக்கை வைத்து விட்டுக் கிளம்பினார்.

இன்று காலை வழக்கமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் பாலும், பிரட்டும் வழங்கப்பட வில்லையாம். உடனே நோயாளிகள் கேட்டதற்கு,''நீங்கள்தானே எம்.எல்.ஏ-விடம் புகார் கொடுத்தீர்கள். அதனால், உங்களுக்குக் கிடையாது'' என்று சொல்லி இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து நோயாளிகள் சிலர்  ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ- வை தொடர்புகொண்டு நடந்த விசயங்களைத் தெரிவித்துள்ளனர். கருங்கல் மருத்துவமனைக்கு விரைந்து சென்ற எம்.எல்.ஏ, மருத்துவமனையில் அமர்ந்து, அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரியும், உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார். எம்.எல்.ஏ.வின் போராட்டத்தால் அங்கிருந்த டாக்டர்கள், ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து எம்.எல்.ஏ. ராஜேஷ்குமாரிடம் கருங்கல் போலீஸாரும், மருத்துவமனை மருத்துவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர். கலெக்டரும் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார். மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரியும் அடிப்படை வசதிகள் அமைக்கப்படும் என உத்தரவாதம் கொடுத்த பின், எழுத்துபூர்வமாக எழுதி கருங்கல் மருத்துவமனை மருத்துவ அதிகாரியிடம் வாங்கிவிட்டு எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் கிளம்பினார். இதனால் குமரி மாவட்டம் பரபரப்பாகக் காணப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement