Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுகாதாரத்தை வலியுறுத்தி மகளிர் சுய உதவிக் குழுவினரின் விழிப்புஉணர்வு பேரணி!

விழிப்பு உணர்வு பேரணி

நெல்லையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக மகளிர் சுய உதவிக் குழுவினர் பங்கேற்ற விழிப்புஉணர்வு பேரணி நடைபெற்றது. 

நெல்லையில், தூய்மை பாரத இயக்கம், மகளிர் திட்டம் சார்பாக ’முழு சுகாதார தமிழகம் முன்னோடி தமிழகம்’ என்கிற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. தூய்மையான, வறுமை இல்லாத, ஊழலற்ற, தீவிரவாதமற்ற, வகுப்புவாத பேதமற்ற இந்தியாவை உருவாக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி நெல்லை ஆட்சியர் அலுவலகத்திலிருந்து பேரணி நடந்தது. இதில் பங்கேற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள், சுகாதாரத்தை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய அட்டையை கையில் ஏந்தியபடி ஊர்வலமாகச் சென்றனர்.  

விழிப்பு உணர்வு உறுதிமொழி

முன்னதாக இதில் பங்கேற்ற 20 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதில், ’’தமிழையும் தமிழ் மண்ணையும் நேசிக்கும் நான் எனது கிராமத்தை தூய்மை கிராமமாகவும் மாநிலத்தை தூய்மை தமிழகமாகவும் மாற்றிட முயல்வேன். திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் நோய்கள், அதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அனைவருக்கும் எடுத்துக் கூறுவேன். 

வீட்டுக்கு வீடு கழிப்பறை அமைப்பதையும் அதன் பயன்பாட்டையும் அனைவரிடமும் வலியுறுத்துவேன். குழந்தைகளிடம் அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் நகம் வெட்டுதல், சோப்பால் கைகழுவுதல் ஆகிய பழக்கத்தை கற்பிப்பேன். பெண்கள், மாற்றுத் திறனாளிகள், முதியவர்களின் நலன் காக்கும் வகையில் செயல்படுவேன். எனது கிராமத்தை திறந்தவெளி மலம் கழித்தலற்ற கிராமமாக மாற்ற முயல்வேன். முழு சுகாதாரம் முன்னோடி தமிழகமாக மாற்றிட உறுதி ஏற்கிறேன்’’ என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 

பின்னர், இதே நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் பேச்சுப் போட்டி, கோலப்போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில், மகளிர் குழுவினர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அதில் வெற்றி பெற்ற பெண்களுக்கும் குழுக்களுக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement