கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணி தொடரும்! - ஓ.என்.ஜி.சி மேலாளர் அறிவிப்பு | ONGC will continue crude oil take process, Says ONGC GM

வெளியிடப்பட்ட நேரம்: 15:43 (12/08/2017)

கடைசி தொடர்பு:16:21 (12/08/2017)

கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணி தொடரும்! - ஓ.என்.ஜி.சி மேலாளர் அறிவிப்பு

கதிராமங்கலம் சுற்றிய பகுதிகளில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று ஓ.என்.ஜி.சி காவிரிபடுகை பிரிவு பொதுமேலாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.


தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலத்தில் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி கச்சா எண்ணெய் எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறி கிராம மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக இந்தப் போராட்டம் நீடித்துவருகிறது. போராட்டத்துக்குத் தலைமைதாங்கிய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட ஒன்பது பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இருப்பினும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு எதிராக கிராம மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.என்.ஜி.சி காவிரி படுகைப் பிரிவு மேலாளர் ராஜேந்திரன், 'கதிராமங்கலம் மக்களின் அச்சத்தைப் போக்க போதிய விளக்கம் அளிக்கப்படும். ஓ.என்.ஜி.சி நிறுவன செயல்பாடுகளால் விவசாயத்துக்குப் பாதிப்பு ஏற்படாது. மீத்தேன் மற்றும் ஷேல் கேஸ் எடுப்பதற்கு ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு அனுமதி கிடையாது. கதிராமங்கலத்தைச் சுற்றிய புதிய பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டு கச்சா எண்ணெய் எடுக்கும் பணி மேற்கொள்ளப்படும். கதிராமங்கலம் மட்டுமல்லாது அனைத்து இடங்களிலும் ஓ.என்.ஜி.சி தொடர்ந்து செயல்படும்' என்று தெரிவித்தார். 
 


[X] Close

[X] Close