Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சர்வதேச பீரங்கிப் போட்டி..! அரையிறுதியில் வெளியேறியது இந்தியா

டி-90 டாங்கு

ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச பீரங்கிப் போட்டியில் இந்தியத் தரப்பில் பங்கேற்ற இரண்டு பீரங்கிகளும் நடுவழியில் நின்றது. இதனால் இறுதிச் சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பினை இழந்தது இந்தியா.

பீரங்கிகளின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் 19 நாடுகள் பங்கேற்ற சர்வதேச டாங்க் பையாத்லான் என்ற போட்டி ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ பகுதியில் நடைபெற்றது. இதில் இந்தியத் தரப்பில் இரண்டு டி-90 பீரங்கிகள் போட்டியில் கலந்துகொண்டன. உள்நாட்டு தயாரிப்பான அர்ஜுன் பீரங்கிகளைப் போட்டியில் ஈடுபடுத்த திட்டமிட்டிருந்தனர். ரஷ்யாவில் போட்டிகள் நடைபெறுவதால் ரஷ்ய வடிவமைப்பில் உருவான டி-90 பீரங்கிகள் சர்வதேசப் போட்டிக்கு அனுப்பப்பட்டன. இந்த வகை டி-90 வாகனங்கள் ரஷ்யாவின் மூன்றாம் தலைமுறை பிரதான போர்க்கவச வாகனமாகக் கருதப்படுகிறது. இந்த வகையான டி-90 வாகனத்தை தரைப்படை, கடற்படை ஆகியவற்றில் ரஷ்யா பெருமளவு பயன்படுத்திவருகிறது. இந்த வாகனத்தைதான் ரஷ்யாவில் நடக்கும் சர்வதேச போட்டிக்கு இந்தியா அனுப்பியது.

போட்டியில் பங்கேற்ற இரண்டு டி-90 பீரங்கிகளும் அரையிறுதிப் போட்டியின்போது இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நடுவழியிலேயே நின்றுபோனது. இதனால் இறுதிச்சுற்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இந்தியா இழந்தது. ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், பெலாரஸ் ஆகிய நான்கு நாடுகள் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement