வெளியிடப்பட்ட நேரம்: 20:48 (12/08/2017)

கடைசி தொடர்பு:20:48 (12/08/2017)

2 கிராம் தங்கத்தில் ஜொலிக்கும் செங்கோட்டை! கடலூர் இளைஞர் அசத்தல்

2 கிராம் எடைகொண்ட தங்கத்தில் டெல்லி செங்கோட்டையை தத்ரூபமாக செய்து அசத்தியிருக்கிறார் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

          

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் மகன் முத்துகுமரன். இவர், சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் பகுதியில் கடந்த 20 வருடங்களாக நகை செய்யும் தொழிலை செய்துவருகிறார். 2 கிராம் 150 மில்லிகிராம் எடைகொண்ட தங்கத்தில் தீப்பெட்டி அளவுக்கும் குறைவாக டெல்லியில் உள்ள செங்கோட்டையை தத்ரூபமாக செய்து எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இதுகுறித்து முத்துக்குமரன், "ஏற்கெனவே நான் குறைந்த அளவு எடையில் சிதம்பரம் நடராஜர் கோவில், தாஜ்மஹால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தூய்மை இந்தியா வடிவமைப்பு, தமிழக சட்டசபை, கிரிக்கெட் உலக கோப்பை என பலவற்றை செய்துள்ளேன். சுதந்திர தின விழா கொண்டாடவுள்ள இத்தருணத்தில் செங்கோட்டையை செய்ததை நான் பெருமையாக கருதுகிறேன். இதற்காக ஐந்து நாள்கள் கடுமையாக உழைத்தேன். அந்த உழைப்பில் உருவானதுதான் இந்த செங்கோட்டை. இச்செங்கோட்டை உருவத்தை பிரதமர் மோடியை சந்தித்து அவருக்கு பரிசாக அளிக்க உள்ளேன். அதற்காக அவரிடம் தேதி, நேரம் கேட்டு கடிதம் எழுதியுள்ளேன். அது அமைந்தால் அதைவிட சந்தோஷம் எனக்கு ஏதுமில்லை' என்றார்.