தேனியில் சுகாதார விழிப்பு உணர்வு பேரணி!

தேனி மாவட்டத்தில் வரும் 15-ம் தேதி வரை சுகாதார வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஊராட்சி மற்றும் ஊரகத்துறை அதிகாரிகள் உட்பட அனைத்து ஊழியர்களும் இணைந்து சுகாதார விழிப்பு உணர்வு பேரணியை நடத்தினர். மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம் துவக்கி வைத்த இந்த பேரணி பெரியகுளம், ஆண்டிபட்டி, சின்னமன்னூர், உத்தமபாளையம், கம்பம், போடி வழியாக கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தது.

திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்க்க வேண்டும். அப்படி திறந்தவெளியில் மலம் கழிப்பதனால் ஏற்படும் நோய் தொற்று மற்றும் கழிப்பறையின் அவசியம் போன்ற என்னற்ற சுகாதார விழிப்பு உணர்வை மக்களிடம் ஏற்படுத்தவே இந்த பேரணி  நடைபெற்றது. மாவட்டம் முழுவதும், 8 ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில், 37ஆயிரத்து 239 தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டி வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த இன்று தேனி மாவட்டம் முழுவதும் கொசு மருந்து அடிக்கப்பட்டது. ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று கொசு மருந்து அடிக்கப்பட்டது மட்டுமல்லாமல், அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது. இதனை தேனி நகராட்சி ஏற்பாடு செய்திருந்தது. தென் மேற்கு பருவமழை காலம் தாழ்ந்து தற்போது தான் பெய்து வருகிறது. கூடவே டெங்கு காய்ச்சலையும் கொண்டுவந்துவிட்டது. இந்நிலையில் ஒரு புறம் சுகாதார நடவடிக்கைகள் மறுபுறம் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் என மாவட்ட நிர்வாகத்தின் தீவிர செயல்பாடுகள் பாராட்டப்பட  வேண்டிய ஒன்று.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!