வெளியிடப்பட்ட நேரம்: 06:49 (13/08/2017)

கடைசி தொடர்பு:06:49 (13/08/2017)

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் மோதல்: 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

காஷ்மீர்காஷ்மீரின் தெற்குப் பகுதி மாவட்டமான ஷோபியானில், தீவிரவாதிகளுக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மூன்று பேர் காயம் அடைந்தனர்.

சைனபோரா பகுதியில் அவ்னீரா கிராமத்தில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து ராணுவத்தினருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இரண்டு வீரர்கள் உயிரிழந்ததாக ஜம்மு-காஷ்மீர் போலீஸார் தெரிவித்தனர்.

தீவிரவாதிகள் அப்பகுதியில் இருந்து தப்பியோடி விட்டதாகவும், அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க