வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (13/08/2017)

கடைசி தொடர்பு:07:30 (13/08/2017)

அரசு ஊழியர், ஆசிரியர்கள் ஆகஸ்ட் 22-ல் வேலைநிறுத்த அறிவிப்பு!

ஜாக்டோ ஜியோ

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 22-ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது.

"தமிழக அரசு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அரசு ஊழியர்கள், ஆசியர்களுக்கு ஏற்கெனவே நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, ஊதியக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, வரும் 16-ம் தேதி முதல், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சந்திப்பு பிரசார இயக்கத்தை நடத்தவும், அடையாள வேலை நிறுத்தத்தின் போது, அனைத்து தாலுகாக்களிலும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் முடிவு செய்திருப்பதாக அந்த அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தங்களின் கோரிக்கைகள் அதன் பின்னரும் நிறைவேற்றப்படா விட்டால், செப்டம்பர் மாதம் 7-ம் தேதிமுதல், காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க