வெளியிடப்பட்ட நேரம்: 11:21 (13/08/2017)

கடைசி தொடர்பு:11:21 (13/08/2017)

இனோவாவுக்குப் போட்டியாக தீவிர டெஸ்டிங்கில் மஹிந்திரா கார்..

இந்தியாவில் யுட்டிலிட்டி வாகன விற்பனையில் முன்னணி நிறுவனமான மஹிந்திரா டொயாட்டோவின் இனோவாவுக்குப் போட்டியாக கார்களை அறிமுகப்படுத்த உள்ளது. கடந்த சில மாதங்களாகவே சென்னையைச் சுற்றி தீவிர டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது.

மஹிந்திரா ஸ்பை படங்கள்

இனோவா போன்றே இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. உள்பக்கத்தில் மாற்றம் செய்ய கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது மஹிந்திரா.

 

மஹிந்திரா ஸ்பை படங்கள்

7 + 1 இருக்கைகள் கொண்ட இந்தக் காரில், வைலட் கலரில் ஸ்பீடா மீட்டர் அமைக்கப்பட்டுள்ளது. சென்டர் ஏசி வெர்டிகல் டைப்பில் உள்ளது. இந்த காருக்கு ஹாண்ட் பிரேக் என்பதால் எட்டுபேர் வரை அமர முடியும். KUV100 காரின் என்ஜினைத்தான் இந்த காருக்கும் பயன்படுத்தி டெஸ்ட் செய்து வருகிறார்கள்.

 

மஹிந்திரா ஸ்பை படங்கள்

இதனால் இதன் விலை குறைவாக இருக்குமாம். இனோவாவின் விலை 14 லட்சம் ரூபாயில் தொடங்கி 21 லட்சம் ரூபாய் வரை உள்ளது. இனோவா கார் வாங்க முடியாதவர்களின் சாய்ஸாக இந்த கார் இருக்கும் என நம்புகிறது மஹிந்திரா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க