'நீட் தேர்வுக்கு ஓராண்டு வேண்டுமானால் விலக்கு அளிக்கலாம்' : நிர்மலா சீதாராமன்!

’நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்திர விலக்கு அளிக்க முடியாது’ என மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன்

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அரசியல் மற்றும் பல்வேறு அமைப்புகளும் பல கட்டப்  போராட்டங்கள் நடத்திவருகின்றன. கட்சியினர் பலர் நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலி போராட்டம், ஆர்ப்பாட்டம், முற்றுகைப் போராட்டம் என நடத்தி வருகின்றனர். அதேபோல், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களும், மாணவ அமைப்புகளும் பல விதமான கோரிக்கைப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நீட் தேர்வு குறித்து மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார். இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ‘நீட் தேர்வில் நிரந்திர விலக்கு என்பதே கிடையாது. தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் மட்டும் நீட் தேர்விலிருந்து ஓராண்டு காலத்துக்கு விலக்கு அளிக்க முடியும். குறிப்பாக, அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் இந்த ஓராண்டு கால விலக்கு அளிக்க முடியும். அதுவும், விலக்கு வேண்டும் எனக் கோரி அவசரச்சட்டம் இயற்றினால் மட்டுமே மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கும். அரசு மருத்துவக்கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்களின் சேர்க்கை விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது’ எனக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!