’குதிரை பேரம் வேண்டாம், நீட் விலக்கு வேண்டும்!’ - கமல் வேண்டுகோள்

நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் நலன் கருதி உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார்.

கமல்ஹாசன்

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அரசியல் மற்றும் பல்வேறு அமைப்புகளும் பல கட்டப்  போராட்டங்கள் நடத்திவருகின்றன. கட்சியினர் பலர் நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலி போராட்டம், ஆர்ப்பாட்டம், முற்றுகைப் போராட்டம் என நடத்தி வருகின்றனர். அதேபோல், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களும், மாணவ அமைப்புகளும் பல விதமான கோரிக்கைப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ’நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க முடியாது. தமிழக அரசு விலக்கு வேண்டுமென அவசரச்சட்டம் இயற்றினால் மட்டும் மத்திய அரசு, அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் ஓராண்டு விலக்கு அளித்து ஆதரவு அளிக்கும்’ என மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்திலேயே சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அதேசமயத்தில் இந்த நீட் தேர்வு விவகாரம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளார். அதில், ‘நீட்தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம்.குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம். மாணவர் எதிர்காலம் பற்றியது. தயைகூர்ந்து உடனே பேசுங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!