மதுரையில் திருநங்கைகள் கொண்டாடிய திருவிழா !

 

திருநங்கைகள் திருவிழா

ஆட்டம், பாட்டம் , கொண்டாட்டத்துடன் மதுரையில் திருநங்கைகள் திருவிழா கொண்டாடினர் . மதுரை மதிச்சியம் பகுதியில் நடைபெற்ற இந்ததிருவிழா தீச்சட்டி , வேல்குத்து , பால்குடம் , சக்திகரகம் , உள்ளிட்ட பல்வேறு நேத்திக்கடனை அம்மனுக்கு திருநங்கைகள் செலுத்தினர்.

வைகை ஆற்றின் தென்கரையில் இருந்து வடகரைக்கு திருவிழா ஊர்வளத்தில் வந்துகொண்டிருந்த  திருநங்கைகளிடம் பேசினோம் : மதுரையில் உள்ள திருநங்கைகள் அனைவரும் இணைந்து ஆடி மாதம் சமயபுரம் மாரியம்மன் மனம் குளிரவைக்க கூழ் ஊத்துநேத்திக்கடன் செய்வோம். அம்மனுக்கு அபிசேகம் செய்து  அலங்காரபட்டு உடைகள் ,நகைகள்  அணிந்து  வேண்டிக்கொள்வோம். இது ஆண்டுதோறும் வெகு விமர்சியாக நடைபெறும்  வைகை ஆற்றின் வழியாக ஊர்வலம் வந்து மதிச்சியத்தில் நாங்கள் நிறுவியுள்ள சிலைக்கு நேற்றிக்கடன் செலுத்துவோம் .

இது முழுக்க முழுக்க திருநங்கைகள் தங்களது பணத்தை சேகரித்து நடத்துகிறோம். இந்த திருவிழாவிற்கு எங்கள் தலைவி நூறியம்மாள் தலைமை தாங்குவார் . பல்வேறு மனகசப்பு , தொல்லைகள் , விரக்தி, இப்படி எல்லாவற்றிலும் இருந்து விடுபட எங்களுக்கு இந்த திருவிழா தான் அருமருந்து .

 

திருநங்கை திருவிழா

இப்பகுதியில் நாங்கள் ஊர்வலமாக வரும் போது பகுதியில் இருக்கும் பொதுமக்கள் ஆதரவு வழங்குவார்கள் . எங்களோடு அவர்களும் இணைந்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார்கள் . அம்மனுக்கு நேற்றிக்கடன் முடிந்த பிறகு இப்பகுதி பொதுமக்களுக்கு விருந்தளித்து உபசரிப்போம் . இந்த திருவிழாவின் மூலம் இப்பகுதி மக்களுடன் இணைந்து பழகுவது அளவற்ற மகிழ்ச்சியை அளிக்கும் . கூத்தாண்டவர் கோயில் திருவிழா மட்டும் அல்ல திருநங்களைக்களுக்கு என்று பல்வேறு இடங்களில் திருவிழா நடைபெறுகிறது . மதுரையில் திருநங்கைகள் கொண்டாடும் இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் நடைபெறும் என தெரிவித்தனர் .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!