வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (13/08/2017)

கடைசி தொடர்பு:10:45 (14/08/2017)

பயிர்க் காப்பீடு படும் பாடு! சிவகங்கையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுகா ஆலங்குளம், தெ.புதுக்கோட்டை உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீட்டுத்தொகை வழங்காததைக் கண்டித்து மானாமதுரை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்டப் பொருளாளர் வீரபாண்டி பேசும் போது, "மானாமதுரை தாலுகா தெ.புதுக்கேட்டை, சின்னபுதுக்கோட்டை, ஆகியவற்றிக்கும், ஆலங்குளம், கணபதியேந்தல், கோச்சடை, அரியலூர், வண்ணான்ணோடை, காக்குடி ஆகிய விவசாயிகளுக்குப் பயிர்க்காப்பீடே கிடையாது. ஆலங்குளம், கணபதியேந்தல், கோச்சடை ஆகிய கிராம விவசாயிகளுக்குப் பயிர்க்காப்பீடுத் தொகை 12 சதவிகிதம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர், வண்ணான்ணோடை, ஆகிய கிராம விவசாயிகளுக்கு 44 சதவிகிதம் பயிர்க்காப்பீடுத் தொகை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்குசந்தனுர், புக்குளி, சீவன்குளம் ஆகிய கிராம விவசாயிகளுக்கு 16 சதவிகிதம் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், சென்னை அதிகாரிகள் குழு சிவகங்கை மாவட்டத்தில் விவசாய நிலங்களை சில மாதங்கள் முன்பு ஆய்வு செய்து 100 சதவிகிதம் பாதிப்பு என அறிவித்தனர்" என்றார்.

தற்போது விவசாயிகளுக்குப் பயிர்க்காப்பீடு, சதவிகித அடிப்படையில் வழங்கி விவசாயிகளை மோசடி செய்வதைக் கண்டித்து மானாமதுரையில் ஒன்றியச் செயலாளர் ஆண்டி, மாவட்டத்தலைவர் ஜெயராமன், மாவட்டப் பொருளாளர் வீரபாண்டி , சி.ஐ.டி.யூ மாவட்டச் செயலாளர் வீரய்யா ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

நீங்க எப்படி பீல் பண்றீங்க