வெளியிடப்பட்ட நேரம்: 01:39 (14/08/2017)

கடைசி தொடர்பு:09:56 (14/08/2017)

'மோடியைப் பற்றி தப்பா பேசறவங்க நல்லாவே இருக்க மாட்டாங்க': ஹெச்.ராஜா சாபம்

 

hraja madurai

 

மதுரை அவனியாபுரம் பகுதியில் நடைபெற்ற பி.ஜே.பியின் மூன்றாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் ஹெச்.ராஜா பேசியதாவது, "பி.ஜே.பி-யின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் மோடியையோ, கட்சியையோ விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியல்ல. மோடி சர்க்கார் அறிவித்த திட்டங்களின் பயன்களை ஏழை, எளிய மக்களுக்கு எடுத்துக்கூறி அந்தத் திட்டங்களைப் பயன்பெற வைப்பதுதான் நோக்கம். பி.ஜே.பிக்கு விளம்பரம் தேவையில்லை. மக்களுக்குத் தெரியும் மோடி எத்தனை மகத்தான திட்டங்களை மக்களுக்குக் கொண்டுவந்துள்ளார் என்று. ஏழை மக்களுக்கு மோடி பல திட்டங்களைக் கொண்டுவந்துள்ளார். ஆனால், மோடி அரசு கார்ப்பரேட் அரசியில் என்று வாய் கூசாமல் பொய் பேசுகிறார்கள். அப்படி மோடியைப் பற்றி தவறாகக் கருத்து பரப்புபவர்கள் நல்லாவே இருக்க மாட்டார்கள் . உத்தரப்பிரதேசத்தில் கேஸ் அடுப்பை கண்ணில் கூட பார்க்காத பெண்களுக்கு கேஸ் அடுப்புகளை வழங்கி மிகப்பெரும் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளார். ஆனால் நெடுவாசல், கதிராமங்கலம் என்று கத்துகின்றவர்கள் யாரும் அவரை நம்ப மாட்டார்கள்.

 

bjp

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் மத்திய அரசின் திட்டங்களைப் பற்றி விளக்கிவருகிறேன். ஆனால், அதைக் கூட பிடிக்காமல் விமர்சனம் செய்கின்றனர். நான் மோடிக்கு சொம்பு அடிக்கிறேன் என்று சொல்கின்றனர். ஆமாம் ஒரு மகத்தான தலைவனுக்கு சொம்பு அடிப்பது தவறல்ல. மோடிக்கு சொம்பு அடிப்பதில் பெருமைகொள்கிறேன்" என்றார் .

நீங்க எப்படி பீல் பண்றீங்க