பிக் பாஸ் வீட்டில் யார் அந்த புதுவரவு?: கமல் வைக்கும் சஸ்பென்ஸ்!

பிக் பாஸ் வீட்டில் புதுவரவுகள் பற்றி கமல் கூறியுள்ளது எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது.

கமல் பிக் பாஸ் தமிழ்


30 கேமராக்கள், 14 பிரபலங்கள் என்று பிரமாண்டமாக தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாள்களைக் கடந்து விட்டது. நிகழ்ச்சி தொடங்கிய சில நாள்களிலேயே ஶ்ரீ வெளியேறினார். இதையடுத்து, வீட்டில் இருப்பவர்கள் ஒதுக்கியதால் பரணி வெளியேறினார். அதேபோல, கஞ்சா கருப்பு, நமீதா, ஆரத்தி என்று அடுத்தடுத்து மக்கள் வாக்களிப்பின்படி ஒவ்வொருவராக வெளியேறினர்.


இதெல்லாம் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க நாளுக்கு, நாள் மக்களிடம் ஆதரவை குவித்து வந்தார் ஓவியா. இதனிடையே, ஆரவ் காதல் விவகாரத்தில் தற்கொலை முயற்சி செய்து அவரும் வெளியேறினார். அவர் வெளியேறிய அடுத்த நாளே ஜூலியும் வெளியேறினார். இதையடுத்து, பிந்து மாதவி புதுவரவாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.


இந்நிலையில், கடந்த வாரம் எவிக்‌ஷன் லிஸ்ட்டில், கடைசியாக சக்தி, சினேகன், ஆரவ் ஆகியோர் இடம்பெற்றனர். இதில், சக்தி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். இந்த சம்பவத்துக்குப் பிறகு, கமல் - சக்தி உரையாடல் நடந்தது. இதைத்தொடர்ந்து நிகழ்ச்சி முடியும் போது, மேலும் பல புதுவரவுகள் உள்ளன என்று கமல் சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.


ஏற்கெனவே ஓவியா பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைகிறார் என்று தகவல் வெளியாகியது. அதேபோல, மேலும் சில பிரபலங்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைவதாகக் கூறப்பட்டது. கமல் சொன்ன அந்த புதுவரவுகள் யார் என்று இன்னும் சில நாள்களில் தெரிந்துவிடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!