வெளியிடப்பட்ட நேரம்: 03:15 (14/08/2017)

கடைசி தொடர்பு:08:04 (14/08/2017)

டெங்கு நோய்க்கு கலை நிகழ்ச்சி மூலம் விழிப்பு உணர்வு!

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறை சார்பில் டெங்கு நோய் தடுப்பு குறித்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சியாக, நாகர்கோவிலில் பேருந்து நிலையத்தில் தொடர்ந்து 12 மணி நேர கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் இதைத் தொடங்கி வைத்தார். பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் இதைப் பார்த்து ரசித்துச் சென்றனர்.


 

கேரள மாநிலத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள டெங்கு நோய், எல்லையோர மாவட்டமான கன்னியாகுமரியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பொது சுகாதாரத் துறை, சித்த மருத்துவத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் போர்க்கால அடிப்படையிலான நோய் தடுப்பு நடவடிக்கைகளால் டெங்கு காய்ச்சல் நோய் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தற்போது கூறுகிறது. இருந்தாலும் டெங்கு நோய் குறித்த அச்சம் மக்கள் மத்தியிலிருந்து போகவில்லை. எனவே டெங்கு நோய் தொடர்பான விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் குமரிமாவட்டத்தில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் குமரிமாவட்ட பொது சுகாதாரத் துறை சார்பில் டெங்கு நோய் தடுப்பு குறித்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சி நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் தொடர்ந்து 12 மணி நேர விழிப்பு உணர்வு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மேளம், நடனம், வில்லிசை, உள்ளிட்ட பல்வேறு  கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் எப்படித் தடுக்கலாம். சுற்றுப்புறங்களை எப்படித் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டன. இதைப் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் ஏராளமான பயணிகள் பார்த்துச் சென்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க