வெளியிடப்பட்ட நேரம்: 07:51 (14/08/2017)

கடைசி தொடர்பு:07:51 (14/08/2017)

'மேலூர் கூட்டத்தில் துரோகிகளை அதிர வைப்பார் தினகரன்': ஆதரவாளர்கள் சூசகம்!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பல்வேறு அணிகளாக சிதறிக்கிடக்கிறது. ஏற்கெனவே, அ.தி.மு.க-வில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருந்த நிலையில், தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி - டி.டி.வி. தினகரன் மோதல் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, 420 என்று விமர்சனம் வைக்கும் அளவுக்கு மோதல் வெடித்துள்ளது. இதனால், அ.தி.மு.க அணிகள் இணைவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது.

தினகரன்


இந்நிலையில், சசிகலாவால் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு தினகரன் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம், மதுரை மாவட்டம் மேலூரில் இன்று நடக்கிறது. இதில் தினகரன், திவாகரன் மற்றும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தக் கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரன் குறித்து எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவுக்கு, தினகரன் பதில் அளிப்பார் என்று கூறப்படுகிறது.

புகழேந்தி


இது குறித்து, தினகரன் ஆதரவாளர் பெங்களுர் புகழேந்தி கூறுகையில், "சின்னம்மா, தினகரன் செய்த உதவியை மறந்துவிட்டு உதாசினப்படுத்துகிறார்கள் சில துரோகிகள். சின்னம்மாவையும், தினகரனையும் ஒரு போதும் அ.தி.மு.க-வை விட்டு பிரிக்க முடியாது. மேலூரில் தினகரன், புனிதப் பயணத்தை தொடங்க உள்ளார். அந்தக் கூட்டத்தில் துரோகிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பல முக்கிய அறிவிப்புகளை தினகரன் வெளியிடுவார்" என்று கூறியுள்ளார்.


"அர்த்தமற்றுப்  பேசுபவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. அனைத்து பிரச்னைகளுக்கும் மேலூர் கூட்டத்தில் விடை கிடைக்கும்" என்று சசிகலாவின் சகோதரர் திவாரகன் கூறியுள்ளார்.